இந்தியா – நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டியில், ராஸ் டெய்லர் அடித்த சிக்சரை, இந்திய இளம் வீரர் சஞ்சு சாம்சன்அந்தரத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20 தொடரில் பங்கேற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா வென்றிருந்த நிலையில், இறுதி போட்டி பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது. துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
164 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே திணறி வந்தது. ஒருகட்டத்தில் அனுபவ வீரரான ராஸ் டெய்லர் சிக்சர் அடித்த பந்தை, பவுண்டரி லைனில் நின்றிருந்த சஞ்சு சாம்சன், அந்தரத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடித்ததோடு மட்டுமல்லாது, 6 ரன்களையும் சேவ் செய்தார்.
கடைசி டி20 போட்டியிலும் அபார வெற்றி: 5-0 என தொடரை வென்றது இந்தியா
‘விடாது துரத்தும் சூப்பர் ஓவர் சூன்யம்’! – இந்தியாவுக்கு மீண்டுமொரு த்ரில் வெற்றி!
இந்த போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற கணக்கில் அலேக் ஆக அள்ளி, நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்தது.
இந்திய அணியின் இந்த 7 ரன்கள் வித்தியாச வெற்றிக்கு, சஞ்சு சாம்சனின் அந்த அசத்தல் கேட்சே முக்கிய காரணம் என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சஞ்சு சாம்சனின் இந்த அசத்தல் கேட்ச் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
பேட்டிங்கில் சொதப்பல் : இந்த டி20 தொடரில் 2 போட்டிகளிலேயே சஞ்சு சாம்சன் பங்கேற்றுள்ளார். முதல் போட்டியில், 5 ரன்களும், 2வது போட்டியில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.