பாகிஸ்தானில் டி10 கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இதில் முதல் நாள் ஆட்டத்தில் வீரேந்திர சேவாக் தலைமையிலான ‘மராத்தா அரேபியன்ஸ்’ அணியும், சகித் அஃப்ரிடி தலைமையிலான பாக்டூன்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய பாக்டூன்ஸ் அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய அரேபியன்ஸ் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்திருந்த போது, அஃப்ரிடி பந்து வீச வந்தார். அவர் வீசத் தொடங்கிய முதல் ஓவரின் முதல் 3 பந்திலும் விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டாக ரொசாரியோ, இரண்டாவது விக்கெட்டாக பிராவோ, மூன்றாவது விக்கெட்டாக சேவாக்கும் வீழ்ந்தனர். இறுதியில், 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டும் எடுத்து அரேபியன்ஸ் அணி தோற்றது.
இப்போட்டி முடிந்த பின்னர் பேட்டியளித்த அஃப்ரிடி, ‘வயதானாலும் நான் இன்னும் இளைஞன் தான்’ என்றார் ஜாலியாக.
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீடியோ இதோ,
Afridi ♥️ pic.twitter.com/ESthqJAdeo
— Rana Talha Asfar (@RTAluvzAfridi) 14 December 2017