Advertisment

ஸ்கூல் புள்ளைங்க மாறி நடந்துகிட்ட வாட்சன், டு ப்ளேசிஸ் .. கிடைச்ச வாய்ப்பையும் கோட்டைவிட்ட டெல்லி! இந்த வருட ஐபிஎல் காமெடி சீன் இதுதான். .

மொத்த மேட்சும் தலைகீழாக மாறி இருக்கோமோ என்னவோ!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shane Watson ipl highlight video

Shane Watson ipl highlight video

Shane Watson ipl highlight video : நேற்றைய தினம் விசாகப்பட்டினத்தில் நடந்த ஐபிஎல் 12 ஆவது சீசனின் இரண்டாவது தகுதிச்சுற்றில் சென்னை அணியின் வாட்சன், டு ப்ளேசிஸ் செய்த மிகப் பெரிய காமெடி இந்த வருடத்தின் ஐபிஎல் சீசனில் மறக்க முடியாத சம்பவமாக மாறியுள்ளது.

Advertisment

நேற்று மேட்சை பார்த்த எல்லோரும் சென்னை அணி வெற்றி பெற்றதை விட முதல் 1 ரன்களை எடுக்க சென்னை அணியின் வாட்சன், டு ப்ளேசிஸ் அடித்த அட்டகாசம் பற்றி தான் அதிகம் பேசுகிறார்கள். இறுதி போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் சென்னை அணி அதிதீவிர பயிற்சியில் ஈடுப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிவேக பயிற்சி இப்படியா வேலை பார்க்கும்? என்பது நேற்று தான் அந்த வீரர்களுக்கே தெரிந்திருக்கும் போல.

ஏற்கனவே நேரிடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள மும்பை அணியுடன், இந்த தகுதிச்சுற்றியில் வெற்றி பெறும் அணி ஃபனல்சில் மோதும். அதில் வெற்றி பெறும் அணியே ஐபிஎல் தொடரின் 12 சீசனின் சாம்பியன் அணியாக அறிவிக்கப்படும்.2 ஆவது தகுதிச்சுற்றில் டெல்லி அணியும் சென்னை அணியும் பலபரீட்சை நடத்தினர்.

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது, சென்னை அணியின் அட்டகாசமான பந்து வீச்சில் டெல்லி அணி 147 ரன்களை எடுத்தது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களம் இறங்கிய சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஷேன் வாட்சன், டு ப்ளேசிஸ் தங்களது முதல் ரன்களை எடுக்க செய்த அலப்பறை இருக்கே..

டு ப்ளேசிஸ் முதல் ஓவரின் 3 ஆவது பந்தை சந்திக்கும் போது பாலை வேகமாக அடித்து விட்டு ரன் எடுக்க முயற்சி செய்தார். அவருக்கு எதிரில் நின்றுக் கொண்டிருந்த வாட்சன் உடனே பாதி தூரம் ஓடி வந்தார். அதற்குள் பந்தை ஃபீல்டர் எடுத்து விட்டதை பார்த்த டு ப்ளேசிஸ் திரும்பி மீண்டும் க்ரீஸுக்கு ஓடினார். அவரை பார்த்த வாட்சன் திரும்பவும் பின் வாங்கினார்.

வாட்சன் பாதி தூரம் ஓடி வந்ததை பார்த்த டு ப்ளேசிஸ் மீண்டும் ஓடி வர ஒரு அடி எடுத்து வைத்தார். அதற்குள் வாட்சன் திரும்பவும் பின்னால் ஓடிவதை பார்த்து அவரும் க்ரீஸுக்கு திரும்ப முயன்றார். ”ஒரே குழப்பாம இருக்குல”.. இப்படிதான் ஒரு நிமிடம் என்ன நடக்குதுனே தெரியாம டெல்லி அணியினர் மண்டையை பிட்சிக்கிடு நின்றார்கள்.

இந்த வாய்ப்பை மட்டும் டெல்லி பயன்படுத்தி இருந்தால் முதல் ஓவரிலே அவர்களால் விக்கெட்டை கைப்பற்றி இருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக பந்தை பிடித்த ஃபீல்டர் பவுலரிடம் பந்தை தூக்கி எறிந்தார். பவுலர் அந்த பந்தை விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார். விக்கெட் கீப்பர் ரிஷபண்ட் இந்த குழப்பத்தில் பந்தை தவறவிட்டார். அதற்குள் வாட்சன் 1 ரன்னை எடுத்துவிட்டு சேஃப்னார்.

பவுண்ட்ரி நோக்கிய ஓடி பந்தை பிடித்து எண்டு கார்ட் போட்டார் நம்ம இஷான் சர்மா. இப்படித்தான் வாட்சன், டு ப்ளேசிஸூம் சேர்ந்து தங்களது முதல் ரன்களை எடுத்தனர். ஆனால் கடைசியில் இவர்களே சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தனர். மேட்ச் முடிவில் தங்களது தவறை டெல்லி அணி உணர்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை வாட்சன் அல்லது டு ப்ளேசிசை அந்த நேரத்தில் டெல்லி அணி அவுட் செய்திருந்தால் மொத்த மேட்சும் தலைகீழாக மாறி இருக்கோமோ என்னவோ!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment