Advertisment

வங்கதேசத்தை பழிதீர்த்த இலங்கை: நாகினி டான்ஸ் கொண்டாட்டம் ஏன்?

Sri Lanka player celebrated the win with 'Nagini Dance’ against Bangladesh in asia cup 2022 Tamil News: வங்க தேச அணியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணியினர் போட்ட நாகினி டான்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
sl players celebrated win over ban with nagini dance, reason and viral video here

sl vs ban asia cup 2022: Why Sri Lanka celebrated win over Bangladesh with 'NAGINI Dance' Tamil News

Sri Lanka vs Bangladesh -  Asia Cup, 2022 Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ஆம் தேதி முதல் தொடங்கிய இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்த ஆறு அணிகளும் தற்போது இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

Advertisment

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பிடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை லீக் சுற்றில் வீழ்த்திய இந்திய அணி சூப்பர் ‘4’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதேபோல், ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி இலங்கை மற்றும் வங்க தேச அணியை வீழ்த்தி சூப்பர் ‘4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

வங்கதேசத்தை பழிதீர்த்த இலங்கை…

இந்நிலையில், ‘பி’ பிரிவில் இருந்து சூப்பர் ‘4’ சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை – வங்காளதேச அணிகள் நேற்று இரவு துபாயில் பலப்பரீட்சை நடத்தின.

இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, வங்காளதேச அணி முதலில் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிப் ஹூசைன் 39 ரன்களும், ஹசன் மிராஸ் 38 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த வங்காளதேச அணி 183 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணி வீரர்கள் 60 ரன்களை திரட்டி இருந்தனர். இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா, சமிகா கருணாரத்னே தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

தொடர்ந்து 184 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால், தொடக்க வீரர் பாத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்கவே, தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. எனினும், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடி வந்தார் தொடக்க வீரர் குசல் மென்டிஸ்.

அந்த அணி ஒரு கட்டத்தில் 77 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறிய நிலையில், குசல் மென்டிசுடன், கேப்டன் தசுன் ஷனகா இணைந்து அணிக்கு தேவையான ரன்களை எடுத்தார். இந்த ஜோடியில், 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்க விட்டு அரைசதம் அடித்த மென்டிஸ் 60 ரன்களிலும், (33 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களை அடித்த ஷனகா 45 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இலங்கை அணியில் அடுத்தடுத்த விக்கெட் இழப்பு, ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் வீசினார். இதில் முதல் பந்தில் ஒரு ரன் வந்தது. 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அசிதா பெர்னாண்டோ (10 ரன், நாட்-அவுட்) 3-வது பந்தில் 2 ரன் எடுத்தார். மேலும் அது 'நோ-பால்' என்று அறிவிக்கப்பட்டதால் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனால், இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான் (2 வெற்றி), இலங்கை (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) அணிகள் சூப்பர் 4 சுற்றை எட்டின. 2 ஆட்டத்திலும் தோற்ற வங்காளதேசம் வெளியேறியது.

நாகினி டான்ஸ் கொண்டாட்டம் ஏன்?

வங்க தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் திரில் வெற்றியை சுவைத்த பின்னர் இலங்கை அணி வீரர்கள் 'நாகினி டான்ஸ்' போட்டு தங்களின் வெற்றியைக் கொண்டாடினார். பொதுவாக, வங்கதேச சர்வதேச தொடர்களில் வெற்றி பெறும் போது நாகினி டான்ஸ் போட்டு வெற்றிக் களிப்பை வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால், நேற்று இலங்கை அணியினர் வங்கதேச அணிக்கு எதிரான வெற்றிக்குப்பிறகு நாகினி டான்ஸ் போட்டுள்ளனர்.

இப்படி இலங்கை அணியினர் நாகினி டான்ஸ் ஆடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்த காரணம், கடந்த 2018 ஆசியக் கோப்பையில், வங்க தேச அணி இலங்கை அணியை நாக்-அவுட் செய்து வெளியேற்றியபோது, இதேபோல் நாகினி டான்ஸ் ஆடி வெற்றியைக் கொண்டியது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணியினர் நாகினி டான்ஸ் போட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Viral Social Media Viral Sports Cricket Srilanka Viral Photo Viral Video Viral News Bangladesh Asia Cup 2018 Bangladesh Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment