பெடரர், நடால் சாதனைகளை முறியடிக்கும் முனைப்பில் ஜோகோவிச்

Novak Djokovic right to focus on Federer, Nadal and the Grand Slam record: இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச், முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், ரஃபேல் நடால் போன்றோரின் சாதனையை முறியடிக்கும் நிலையில் உள்ளார்.

Sports news in tamil Novak Djokovic right to focus on Federer, Nadal and the Grand Slam record tennis tamil news
Sports news in tamil Novak Djokovic right to focus on Federer, Nadal and the Grand Slam record

Sports news in tamil: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், ரஷியாவின் டேனில் மெட்விடேவ்வை 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இது அவரின் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச், முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், ரஃபேல் நடால் போன்றோரின் சாதனையை முறியடிக்கும் நிலையில் உள்ளார். அதோடு இதுபோன்று பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்லும் முனைப்பிலும் உள்ளார்.

“ரோஜர் பெடரர், ரஃபேல் நடால் போன்றோர் ஏற்கனேவே வரலாற்றை உருவாக்கியுள்ளனர். அவர்கள் டென்னிஸ் விளையாட்டில் மிகப்பெரிய அடையாளத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வது மற்றும் பதிவுகளை முறியடிப்பது பற்றி நான் என்ன நினைக்கிறேனா, அதை நிச்சயமாக செய்வேன். இன்று முதல் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறும் வரை, எனது கவனமும், ஆற்றலும் பெரிய போட்டிகளில் இருக்கும். மேலும் பெரிய போட்டிகளில் கோப்பைகளை வெல்ல முயற்சி செய்வேன்” என்று கூறியுள்ளார்.

ஜோகோவிச் பெரிய போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாக கூறியிருப்பது ஒரு வகையில் நல்ல யோசனையாக இருக்கும். ஏனெற்றால் குறைந்த போட்டிகளில் விளையாடுவது அவரது உடற்தகுதியை கட்டுக்குள் வைத்திருக்கும். ஜோகோவிச்சிர்க்கு வலது முழங்கையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்க ஒன்று. அதோடு இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அடிவயிற்றுப்பகுதியில் பிரச்னை ஏற்பட்டது.

பெடரர் மற்றும் 23 முறை சாம்பியன் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் பல ஆண்டுகளாக பெரிய போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது மேலும் குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். “நீங்கள் நம்பர் 1 தரவரிசைக்குச் செல்லும்போது, ​முழு சீசனிலும், அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாட வேண்டும். எனது குறிக்கோள்களை மாற்றியமைக்கும் போது, எனது காலெண்டரையும் கொஞ்சம் கொஞ்சமாக நான் சரிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ‘பீட் சம்ப்ராஸ்’ டென்னிஸ் உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்தார். ஆனால் அவருடைய சாதனைகள் வெறும் 20 ஆண்டுக்குள் பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரால் முறியடிக்கப்பட்டு விட்டார்.

ஜோகோவிச்சின் பயிற்சியாளர் கோரன் இவானிசெவிக், 2001ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர். நடால் பிரெஞ்சு ஓபனில் “இன்னும் ஒரு, இரண்டு” சாம்பியன்ஷிப்பை மட்டுமே பெறுவார் என்று கணித்துள்ளார். அங்கு அவர் கடந்த அக்டோபரில் 13 வது இடத்தைப் பிடித்திருந்தார்.

“ரோஜரும், ரஃபாவும் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள் என்று முன்பு கூறியிருந்தேன். நான் மீண்டும் சொல்கிறேன். டென்னிஸ் போட்டிகளில் அவர்கள் செல்லும் தூரம் நானும் செல்வேன். இந்த டென்னிஸ் உலகம் ஒரு தடகள போட்டி போன்றது. இந்த ஓட்டத்தில் யார் அதிக போட்டிகள் விளையாடி உள்ளது. யார் அதிக வெற்றி பெற்றுள்ளனர் என்பது இங்கு முக்கியம் என்று நினைக்கிறேன். அதேவேளையில் இங்கு நாங்கள் ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்துகிறோம், ஒருவருக்கொருவர் எல்லைக்குத் தள்ளுகிறோம்” என்று ஜோகோவிச் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sports news in tamil novak djokovic right to focus on federer nadal and the grand slam record tennis tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com