Advertisment

சுரேஷ் ரெய்னாவின் புதிய அவதாரம்.. டெல்லி அணியில் முன்னாள் சிஎஸ்கே வீரர்! மேலும் செய்திகள்

குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் ராய், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக ரெய்னா சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
சுரேஷ் ரெய்னாவின் புதிய அவதாரம்.. டெல்லி அணியில் முன்னாள் சிஎஸ்கே வீரர்! மேலும் செய்திகள்



சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, வரும் ஐ.பி.எல் போட்களில் புதிய அவதாரம் ஒன்றை எடுக்க உள்ளார்.

Advertisment

15-ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரெய்னாவை தக்கவைக்கவில்லை.

இந்த சூழலில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் ராய், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து, அவருக்கு பதிலாக ரெய்னா சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவை தேர்வு செய்யாமல் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரை அந்த அணி தேர்வு செய்தது. இதனால் ரெய்னா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெய்னாவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்த ஸ்டார் நிறுவனம் அவரை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்ய பெரும் தொகையை வழங்க முன்வந்தது.

டெல்லி அணியின் உதவி பயிற்சியாளரான முன்னாள் சிஎஸ்கே வீரர்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) உள்ளார். உதவி பயிற்சியாளர்களாக பிரவீன் ஆம்ரே, அஜித் அகர்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இருக்கின்றனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நேற்று நியமிக்கப்பட்டார்.

40 வயதான வாட்சன் ஆஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்ட், 190 ஒருநாள், 58 இருபது ஓவர் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர். சிஎஸ்கே அணிக்காவும் இவர் விளையாடியுள்ளார்.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்?

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது “செஸ் ஒலிம்பியாட் 2022” நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

200 நாடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக கொரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

அடித்து நொறுக்கும் பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணியின் இரண்டாவது டெஸ்ட் கராச்சியில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் உஸ்மான் கவாஜா 160 ரன்கள் குவித்தார்.

‘மைதானத்தில் மட்டுமல்ல, டான்ஸும் ஆடுவாங்க!’ அனிருத் பாட்டுக்கு செம ஸ்டெப் போட்ட பி.வி சிந்து

இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 148 ரன்களை எடுத்தது பாகிஸ்தான்.

இந்நிலையில் தனது 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது ஆஸி.,

506 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இன்றே கடைசி நாள் என்ற நிலையில், விளையாடிவரும் பாகிஸ்தான் தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறது. அந்த அணியின் கேப்டன் பாபர் ஆஸம் சதம் பதிவு செய்து ஆஸி., பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment