Advertisment

ஐ.எஸ்.எல்.: அரையிறுதியில் 4 அணிகள்.. மகளிர் கிரிக்கெட் அப்டேட்.. மேலும் செய்திகள்

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய மகளிர் அணி விளையாடியது.

author-image
WebDesk
New Update
ஐ.எஸ்.எல்.: அரையிறுதியில் 4 அணிகள்.. மகளிர் கிரிக்கெட் அப்டேட்.. மேலும் செய்திகள்

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.

Advertisment

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான் அணியை 0-1 என்ற கணக்கில்  ஜாம்ஷெட்பூர் அணி வீழ்த்தியது.

இந்த நிலையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் வரும் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த அரையிறுதி போட்டிக்கு ஜாம்ஷெட்பூர், கேரளா , ஐதராபாத், ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

11-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில்  ஜாம்ஷெட்பூர் – கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதுகின்றன. 12-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஐதராபாத் எஃப்சி- ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.

மார்ச் 20-ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு வீரர்கள் உக்ரைன், ரஷ்யாவிலிருந்து வெளியேறலாம்: சர்வதேச கால்பந்து சம்மேளனம்

ரஷ்யா மற்றும் உக்ரைனில் விளையாடி வரும் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வேறு கிளப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 30 வரை ​​வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க உரிமை உண்டு என்று  சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக லான்ஸ் க்ளூசனர் நியமனம்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக லான்ஸ் க்ளூசனர் (50) நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் க்ளூசனர், ஜிம்பாப்வே ஆடவர் தேசிய அணியில் பேட்டிங் பயிற்சியாளராக மீண்டும் இணைந்துள்ளார். 

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய கூட்டத்தின் போது அவரது நியமனம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல், கிரேக் எர்வின் ஜிம்பாப்வே அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக செயல்படுவார் எனவும், சீன் வில்லியம்ஸ் டெஸ்ட் அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டது. 

முதல் டெஸ்ட் டிராவில் முடிய வாய்ப்பு

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 476 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 459 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை விட 17 ரன்கள் பின்தங்கியுள்ளது. இரு அணிகளும் இன்னும் தலா ஒரு இன்னிங்ஸ் விளையாடினால் மட்டுமே ஆட்டத்தில் முடிவு எட்டும் நிலையில், இன்று கடைசி நாள் என்பதால், ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணி 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

பாக்., அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸி., மகளிர் வெற்றி

மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6 ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் விளையாடியது. 

அணியின் தொடக்க ஆட்டக்கரர்கள் வந்த  வேகத்தில் வெளியேறினாலும், பொறுப்புடன் விளையாடிய அணியின் கேப்டன் மரூப், கடைசிவரை களத்தில் 78 ரன்கள் குவித்தார். அலியா ரீயாஸ் 53 ரன்கள் குவித்தார். இறுதியில் பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அலானா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையும் படியுங்கள்: பாக். கேப்டனின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த இந்திய மகளிர் அணி… வைரல் வீடியோ!

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய மகளிர் அணி விளையாடியது.

34.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment