Advertisment

ஐ.பி.எல்: கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்.. இவரது சதத்தால் ஃபைனலில் ஆஸி., மகளிர்.. மேலும் செய்திகள்

மெல்போர்ன் மைதானத்தின் கேலரியில் ஒரு பகுதியில் இருந்த ‘கிரேட் சதர்ன் ஸ்டாண்ட்’, ‘ஷேன் வார்னே ஸ்டாண்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
ஐ.பி.எல்: கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்.. இவரது சதத்தால் ஃபைனலில் ஆஸி., மகளிர்.. மேலும் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 ஆவது லீக் ஆட்டம் மார்ச் 29ஆம் தேதி புணேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisment

இந்த ஆட்டத்தில் ஐதராபாத்-ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத் அணி. அப்போது பந்துவீசுவதற்கு கால தாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் அனைத்து ஓவர்களை வீச வேண்டியது விதிமுறையாகும். இதில் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும்.

அந்த வகையில் இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியில் இணையும் ஆஸி., வீரர் மார்ஷ்

காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் டெல்லி கேபிட்டல் அணியில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

30 வயதாகும் மிட்செல் மார்ஷ் ஆல்-ரவுண்டர் ஆவார். இவரை டெல்லி கேபிட்டல் அணி ரூ.6.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தற்போது அவர் டெல்லி கேபிட்டல் அணியின் இயன்முறை சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். காயத்தில் இருந்து மீண்ட உடன் அவர் டெல்லி அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிச்சுற்றில் ஆஸி., மகளிர் அணி

பெரிதும் விரும்பிப் பார்க்கப்பட்டு வரும் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிர் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. தொடக்க வீராங்கனைகள் ஆர்.ஹெய்ன், ஹீலி அதிரடியாக விளையாடினர். விக்கெட் கீப்பர் ஹீலி சதம் பதிவு செய்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். ஹெய்ன்ஸ் 85 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார்.

மூனி 43 ரன்கள் எடுத்தார். மழை காரணமாக 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இவ்வாறாக 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா.

306 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 148 ரன்களில் ஆட்டமிழந்தது. இவ்வாறாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

‘உங்க ஃபிட்னஸ் போதாது பாஸ்’: கே.எல் ராகுலை விமர்சிக்கும் ‘தோழி’யின் தந்தை

50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற

பிரமாண்ட நினைவஞ்சலி கூட்டம்

ஆஸ்திரேலிய அரசு சார்பில் வார்னேவுக்கு மெல்போர்னில் உள்ள எம்.சி.ஜி. மைதானத்தில் நேற்று பிரமாண்டமான நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு தங்களது ஹீரோவுக்கு பிரியா விடை அளித்தனர். 2 மணி நேரம் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆலன் பார்டர், மார்க் டெய்லர், இங்கிலாந்தின் நாசர் ஹூசைன், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா உள்ளிட்டோர் வார்னே குறித்த தங்களது நினைவுகளை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டனர். மெக்ராத், மைக்கேல் கிளார்க், கில்கிறிஸ்ட், சைமண்ட்ஸ் பிரெட்லீ உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் வந்திருந்தனர்.

வார்னேவை கெளரவிக்கும் வகையில் அவரது சொந்த ஊரான மெல்போர்ன் மைதானத்தின் கேலரியில் ஒரு பகுதியில் இருந்த ‘கிரேட் சதர்ன் ஸ்டாண்ட்’, ‘ஷேன் வார்னே ஸ்டாண்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த ஸ்டாண்டை வார்னேவின் வாரிசுகள் திறந்து வைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Sports Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment