Advertisment

மகளிர் கிரிக்கெட் அப்டேட்.. ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி… மேலும் செய்திகள்

பெங்களூரு அணி இன்னும் புதிய கேப்டனை அறிவிக்கவில்லை. விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் ,  யார் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர் .

author-image
WebDesk
New Update
மகளிர் கிரிக்கெட் அப்டேட்.. ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி… மேலும் செய்திகள்

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி முல்கேம் அன்டெர் ரூ நகரில் நேற்று தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisment

இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜியா மின்னை எதிர்கொண்டார்.  47 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அவர் 21-15, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில், லக்‌ஷயா சென், தாய்லாந்தின் கன்டாபோன் வாங்சரோனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 47 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அவர் 21-6, 22-20 ன்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில்,  துருவ் கபிலா-எம்.ஆர்.அர்ஜூன் ஜோடியும், தோல்வியடைந்தனர்.

முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றனர். சிந்து தனது அடுத்த போட்டியில் ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரேல்ஸ் அல்லது சீனாவின் சாங்-இ-மானை எதிர்கொள்வார். ஸ்ரீகாந்த் அடுத்த போட்டியில் சீனாவின் லூ குயாங் சுவை எதிர்கொள்வார்.

நல்லா பாருங்க… இது சேப்பாக்கம் இல்லை’ நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடித்த சூரத்!

மகளிர் உலக கோப்பை 2022:

இந்தியா-நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்

நியூசிலாந்தில் நடந்து வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (வியாழக்கிழமை) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க்கில் நடைபெறவுள்ளது.

லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் சோபி டேவின் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

வலுவான நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.

அந்த வெற்றி உத்வேகத்தை தொடர இந்திய அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி இந்தியாவின் சவாலை முறியடிக்க நியூசிலாந்து அணி போராடும். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இதுவரை 53 சர்வதேச ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 32-ல் நியூசிலாந்தும், 20-ல் இந்தியாவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

எனது பரிசுத் தொகையை நன்கொடையாக

வழங்கப் போகிறேன்- டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே

டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே இந்த ஆண்டு முழுவதும் தான் பங்கேற்கும் போட்டிகளின் பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கப் போவதாக தெரிவித்தார்.

கடந்த மாத இறுதியில் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே கூறினார்.

இந்நிலையில் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே இந்த ஆண்டு முழுவதும் தான் பங்கேற்கும் போட்டிகளின் பரிசுத் தொகையிலிருந்து தனது வருமானத்தை நன்கொடையாக வழங்கப் போவதாக தெரிவித்தார்.

சிறுவயதில் இருந்தே அடுத்த கபில்தேவ் ஆக விரும்பினேன்: அஸ்வின்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவை (434 விக்கெட்) பின்னுக்கு தள்ளிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் 35 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

28 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் (431 விக்கெட்) சாதனையை கபில்தேவ் முறியடித்த போது நான் எனது தந்தையுடன் சேர்ந்து பார்த்து உற்சாகம் அடைந்தேன். கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கையை தாண்டுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஏனெனில் நான் 8 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது பேட்ஸ்மேனாக வேண்டும் என்றே விரும்பினேன்.

1994-ம் ஆண்டில், பேட்டிங் தான் எனது பிரதான ஆசையாக இருந்தது. அச்சமயம் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங்கில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். கபில்தேவ் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அடுத்த கபில்தேவாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காக எனது தந்தையின் அறிவுரையின்படி சிறு வயதில் பேட்டிங் மட்டுமின்றி மிதவேகமாக பந்து வீசவும் பழகினேன் என்றார்.

.பி.எல்: பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார்?

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.

மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

இந்நிலையில் பெங்களூரு அணி இன்னும் புதிய கேப்டனை அறிவிக்கவில்லை. விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் ,  யார் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர் .

 புதிய கேப்டனை மார்ச் 12ம் தேதி அறிவிக்கிறது பெங்களூரு அணி நிர்வாகம். .விராட் கோலிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என  ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறர்கள் .

இந்நிலையில் பெங்களூரு அணிக்கு தென்ஆப்பிரிக்காவை  சேர்ந்த (முன்னாள் சென்னை அணி வீரர் ) டு பிளெஸ்சிஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு அணி டு பிளெஸ்சிசை  ரூ 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Tamil Sports Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment