மின்னல் வேகத்தில் ஓடும் நீரஜ் சோப்ரா… புகழ்ந்து தள்ளிய அமெரிக்க ஒலிம்பியன் – வீடியோ!

மின்னல் வேகத்தில் ஓடி பயிற்சி பெற்று வரும் நீரஜ் சோப்ராவை புகழ்பெற்ற அமெரிக்க ஸ்ப்ரிண்டிங் ஜாம்பவான் மைக்கேல் ஜான்சன் புகழ்ந்துள்ளார்.

Sprint legend Michael Johnson praises Neeraj Chopra’s movement Tamil News
In the video, Chopra can be seen going through his warm-up drills with relative ease, in a seamless motion. Perhaps it's testament to his extensive training in the US the whole of 2022. (Videograb)

Sprint legend Michael Johnson – Neeraj Chopra Tamil News: 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. இதில், இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவில் களமிறங்கிய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் அவர், 2008-ல் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய தனிநபர் தடகள வீரர் மற்றும் வரலாற்றில் இரண்டாவது வீரர் என்கிற பெருமையும் பெற்றார். அவரின் இந்த வெற்றி தடகள வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமைத்துள்ளது.

மேலும், இந்தியாவில் பெரிய அளவில் எந்த அங்கீகாரமும் பெறாத இந்த ‘ஈட்டி எறிதல்’ விளையாட்டு தற்போது நாடும் முழுதும் பேசப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டை தங்களது எதிர்காலமாக் கருதிய இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கையும், ஊக்கமும் கிடைத்துள்ளது. தவிர, இந்த விளையாட்டில் பயிற்சி பெற துடிக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.

சர்வதேச போட்டியில் சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா… வரலாறுச் சாதனை படைத்து அசத்தல்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு நீரஜ் சோப்ரா சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகிறார். மேலும், சாதனையையும் படைத்துள்ளார். கடந்தாண்டு செப்டம்பரில் சுட்சர்லாந்தில் நடந்த டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு களமாடினார். தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவர் 88.44 மீ தூரம் வரை ஈட்டியை எறிந்து டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றார். இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்கிற சாதனையை அவர் படைத்தார்

இதேபோல், 25 வயதான நீரஜ் சோப்ரா 2022 ஆம் ஆண்டு ஓரிகானில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், 2003 ஆம் ஆண்டு பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, உலகப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

தற்போது நீரஜ் சோப்ரா வருகிறார் ஆகஸ்ட் 19-27 வரை ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தயாராகி வருகிறார்.

மின்னல் வேகத்தில் ஓடும் நீரஜ் சோப்ரா… புகழ்ந்து தள்ளிய அமெரிக்க ஒலிம்பியன்

இந்நிலையில், மின்னல் வேகத்தில் ஓடி பயிற்சி பெற்று வரும் நீரஜ் சோப்ராவை புகழ்பெற்ற அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் (ஸ்ப்ரிண்டர்) மைக்கேல் ஜான்சன் புகழ்ந்துள்ளார்.

ஸ்ப்ரிண்டிங் ஜாம்பவான் மைக்கேல் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய வீடியோவில், “அவர் ஒரு ஈட்டி எறிதல் வீரர்! ஒலிம்பிக் சாம்பியன் ஈட்டி எறிபவர். ஆனால் ஈட்டி எறியும் அவர் ஸ்ப்ரிண்டர்/ஜம்பர் அசைவுகளை செய்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சோப்ரா தனது வார்ம்-அப் பயிற்சிகளை ஒப்பீட்டளவில் எளிதாக, தடையற்ற இயக்கத்தில் செல்வதைக் காணலாம். 2022 ஆம் ஆண்டு முழுவதும் அமெரிக்காவில் அவர் மேற்கொண்ட விரிவான பயிற்சிக்கு இது சான்றாக இருக்கிறது.

ஸ்ப்ரிண்டிங் ஜாம்பவான் மைக்கேல் ஜான்சனின் பதிவிற்கு பதில் அளித்துள்ள நீரஜ் சோப்ரா, “இப்போது உங்கள் ஒப்புதல் கிடைத்துவிட்டது. சீசனுக்கான ஸ்பிரிண்ட் காலெண்டரை சரிபார்க்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

ஸ்ப்ரிண்டிங் ஜாம்பவான் மைக்கேல் ஜான்சன் 8 உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கங்களை வென்றவர். 200 மீ மற்றும் 400 மீ ஓட்டங்களில் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனையையும் படைத்துள்ளார். இண்-டோர் ட்ராக்கில் நீரஜ் சோப்ரா வார்ம்-அப் செய்யும் வீடியோவைக் கண்டு அவர் வியப்படைந்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Sprint legend michael johnson praises neeraj chopras movement tamil news

Exit mobile version