வெல்கம் 'அலெக்ஸ் ஹேல்ஸ்'! சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score

ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்கிய முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை ஏழு போட்டியில் ஆடியுள்ள சன் ரைசர்ஸ் ஐந்து வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பந்துவீச்சு தான் இவர்களது மெகா ஆயுதம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், இன்று ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைப்பு அளிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், சன்ரைசர்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய டேவிட் வார்னர், ஹைதராபாத் அணியில் இருந்து விலகிய பிறகு, அவருக்கு மாற்றாக ஹேல்ஸ் சேர்க்கப்பட்டார். தற்போது, பேட்டிங்கை வலுப்படுத்தும் வகையில், அவருக்கு முதன் முறையாக அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என்னதான், பந்துவீச்சு மூலம் ஹைதராபாத் அணி ஜெயித்தாலும், பேட்டிங் என்பது ஊசி வெடி போலவே உள்ளது. இதை மாற்ற, அலெக்ஸ் ஹேல்ஸ் சேர்க்கப்பட்டது உண்மையில் நல்ல மூவ் தான். அவர் 10 ஓவர் நின்றுவிட்டால் அதுவே போதுமானது.

அதேசமயம், ஆறு போட்டியில் விளையாடி அதில் மூன்று போட்டியில் தோற்றுள்ள ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, இன்றைய போட்டியில் வென்று, பிளே ஆஃப் போராட்டத்தில் நீடிக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த அணியில் இரு மாற்றமாக இஷ் சோதி மற்றும் உள்ளூர் வீரர் மஹிபால் லாம்ரோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ராஜஸ்தானை சொந்த மாநிலமாக கொண்ட மஹிபால் லாம்ரோர் ஆல் ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் வருகையும் அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

ஜோஃப்ரா ஆர்ச்சர்,

கிருஷ்ணப்பா கெளதம்,

மஹிபால் லாம்ரோர்

ஆகியோரை அணியில் சேர்த்திருப்பது உண்மையில் ராஜஸ்தான் நிர்வாகம் செய்த ஆகச் சிறந்த செயல் தான். நிச்சயம் இவர்களில் ஒருவராவது ராஜஸ்தான் அணயின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இப்போட்டியின் Live Cricket Score Card-ஐ உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

 

×Close
×Close