Advertisment

ரொனால்டோவுக்கு இது நல்லதல்ல என்றால் எனக்கும்… கோகோ கோலா பாட்டில்களை அகற்றிய வார்னர்!

Warner does a Ronaldo, removes coca cola bottles during press conference Tamil News: செய்தியாளர் சந்திப்பில் வார்னர் கோகோ கோலா பாட்டில்களை அகற்ற சொன்ன வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
T20 World Cup news in tamil: Warner does a Ronaldo, removes coca cola bottles during press conference

 T20 World Cup news in tamil: 7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான ‘சூப்பர்-12’ ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில் குரூப்-2ல் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் நேற்றை ஆட்டத்தில் பலப்பரீட்சை நடந்தின.

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 17வது ஓவர் முடிவிலே நிர்ணயிக்கப்பட்ட 155 ரன்கள் கொண்ட இலக்கை எட்டியது. இதனால் அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 42 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்தார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஆரோன் பின்ஞ் 23 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார்.

publive-image

இந்தப்போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டேவிட் வார்னர் மேஜை மீது வைக்கப்பட்டு இருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றச் சொன்னார். இதனால் அந்த சந்திப்பு சில நிமிடங்களுக்கு பரபரப்பானது. அப்போது பேசிய வார்னர் "நான் இவற்றை (கோகோ கோலா பாட்டில்களை) அகற்றலாமா? அல்லது நான் அதை அங்கே வைக்க வேண்டுமா? என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், “கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இது நல்லதல்ல என்றால் எனக்கும் நல்லதல்ல" என்றார்.

publive-image

வார்னர் கோகோ கோலா பாட்டில்களை அகற்ற சொன்ன இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய கால்பந்து போட்டியின் போது, கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் தனக்கு முன்புறமாக இருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்ற சொல்லி தண்ணீர் பாட்டில்களை வைக்கச் சொன்னார். பிறகு அனைவரும் "அக்குவா" தண்ணீர் குடியுங்கள் என்று குறிப்பிட்டார். இதனால் கோகோ கோலா நிறுவனம் சர்வதேச பங்குச்சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. மேலும், 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் அடைந்தது.

publive-image

தற்போது வார்னர் கோகோ கோலா பாட்டில்களை அகற்றும் காட்சிகள் கணிசமான சமூக ஊடக கவனத்தை ஈர்த்ததுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவு குறித்த செய்திகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket T20 Worldcup Srilanka Australia David Warner
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment