Advertisment

விராட் கோலிக்கு மிரட்டல் இந்த சி.எஸ்.கே வீரர்தான்... இன்று வெற்றி யாருக்கு?

டி20 உலககோப்பை போட்டியில் 5 போட்டிகளில் விளையாடி 3 அரைசதத்துடன் 246 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள் பட்டியலில் விராட்கோலி முதலிடம் பிடித்துள்ளார்

author-image
WebDesk
New Update
விராட் கோலிக்கு மிரட்டல் இந்த சி.எஸ்.கே வீரர்தான்... இன்று வெற்றி யாருக்கு?

டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட்கோலியை ரன் குவிக்க விடாமல் தடுத்து அவரது விக்கெட்டை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி கூறியுள்ளார்.

Advertisment

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலககோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தான் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 13-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதும் என்ற நிலையில், இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற வியூகம் அமைத்து வருகின்றனர். இதில் குறிப்பாக இங்கிலாந்து அணியின் கவனம் இந்தியாவின் விராட்கோலி, மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவர் மீதும் திரும்பியுள்ளது.

டி20 உலககோப்பை போட்டியில் 5 போட்டிகளில் விளையாடி 3 அரைசதத்துடன் 246 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள விராட்கோலியை விரைவில் வீழ்த்த வேண்டும் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார். உண்மையில் இது மொயின் அலியின் நம்பிக்கை தான். ஏனென்றால் இதற்கு முன்பு சில முறை விராட்கோலி விக்கெட் அவர் வீழ்த்தியுள்ளார்.

மொயின் அலி கடந்த காலங்களில் கோலியை, டெஸ்ட் போட்டிகளில் கூட, தனது பெரிய டர்னிங் ஆஃப்-பிரேக் பந்துவீச்சால் கிளீன்-பவுல்ட் செய்துள்ளார். மொயின் அலி பந்துவீச்சில் கோலி தனது காலை முன் வைத்து கவர் டிரைவை ஆட முயற்சித்து ஆட்டமிழந்துள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த புனே மைதானத்தில் இந்த ஆண்டு மே மாதம்,நடைபெற்ற போட்டியில், கோலி மொயின் அலி பந்துவீச்சை எதிர்கொண்டு ஆன்சைடுக்கு திருப்ப முயன்றார். ஆனால் அவரது பேட்டிற்கும் கால் பேடுக்கும் இடையில் சென்ற பந்து ஸ்டெம்புகளை பதம் பார்த்தது. அப்போது களத்தில் கோலியின் ஒவ்வொரு அசைவையும் கண்கானித்து பந்துவீசுவதில் மொயின் அதிக கவனம் செலுத்தினார்.

இதில் விராட்கோலி நேராக சென்ற ஒரு பந்து வீச்சை வெளியே கட் செய்ய முயற்சித்தார். ஆனால் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் மொயின் அலி தனது லைனை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் இருந்து துவக்கியவுடன், அவர் தனது விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனிடையே அடிலெய்டு மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மந்தமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மொயின் அலி கோலியின் விக்கெட்டை வீழ்த்த சற்றே மந்தமான இந்த ஆடுகளத்தில் ஷார்ட் எக்ஸ்ட்ரா-கவர் வரை விளையாடும் வகையில் பந்துவீச வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் போது, ​ மொயீன் மற்றும் கோலி நேருக்கு நேர் மோதினர். கவர் பகுதியை காலியாக வைத்திருந்த மொயின் அலி அப் சைடு பந்தை வெளியே வீசி கோஹ்லியை கவர்-டிரைவ், பட்டர் ஷாட் விளையாட தூண்டினார்.ஆனால் பந்து விலகிச் சென்ற நிலையில், பிட்ச் செய்த பிறகு திடீரென திரும்பி ஆஃப்-ஸ்டம்பின் மேல் அடிக்க கோலி ஆட்டமிழந்தார்.

ஆட்டமிழந்தாலும் இது எப்படி நடந்தது என்று யோசித்துக்கொண்டே கோலி நீண்ட நேரம் அங்கேயே நின்றார். இந்த போட்டியில் கோலி டக் அவுட் ஆகிய வெளியேறினார். கோலிக்கு,  சிறந்த கவர்-டிரைவ் ஆடுவதில் வல்லவராக இருந்தாலும், காலியாக இருக்கும் ஆஃப்-சைட் ஸ்பாட், எதிர்க்க முடியாத அளவுக்கு பெரிய சலனமாக இருந்தது.

அரையிறுதி போட்டி குறித்து மொயின் அலி கூறியதாவது:

சிறந்த வீரர்களை​ டி20 கிரிக்கெட்டில் ரன் குவிக்க விடாமல் நிறுத்துவது கடினம். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிக்கு முன்னதாக, நாங்கள் அவர்களை கட்டுப்படுத்தும் திட்டத்தை வகுக்க வேண்டும். கோலி நன்றாக விளையாடுகிறார், எனவே எங்கள் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். நான் இந்தியாவுடனும் இந்தியாவுக்கு எதிராகவும் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஒரு அணியாக, எதையும் எதிர்கொள் நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் அவருக்கு எப்படி பந்து வீசப் போகிறோம் என்பதை அறிந்து அந்தத் திட்டங்களை நன்றாக செயல்படுத்துவோம் என்று நம்புகிறோம்

அதேபோல் கோலி எப்படி பேட்டிங் செய்கிறார் என்பது அவருடைய சொந்த நம்பிக்கையைப் பொறுத்தது. ஆசியக் கோப்பைக்குப் பிறகு, அவர் தனது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே எங்கள் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்., அவர்கள் சிறந்த வீரர்களாக இருக்கும் போது, ​​டி20 கிரிக்கெட்டில் கட்டுப்படுத்துவது கடினம். அதே சமயம் இந்தியா வெளிப்படையாக மக்கள் முன்னிலையில் அடுத்தத்துடன் விளையாட பழகிவிட்டது என்று கூறியுள்ளார்.

சென்னை டெஸ்ட் போட்டியில் மொயின் அலி கோலியின் விக்கெட்டை கைப்பற்றியது 2002-ல் ட்ரென்ட் பிரிட்ஜில் நடந்த போட்டியில், சச்சின் டெண்டுல்கருக்கு மைக்கேல் வாகனின் ஆஃப் பிரேக் பந்துவீச்சு நினைவுக்கு வந்தது. இங்கிலாந்து அணியின் பகுதி நேர சுழற்பந்துவீச்சாளராக இருந்த வாகன் மாஸ்டர் பேட்ஸ்மேனுக்கு எதிராக ஒரு மேஜிக் தருணத்தை உருவாக்கினார் – இந்த போட்டியில் சச்சின் 92 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Virat Kohli Indian Cricket Team Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment