வாழ்த்துகள் பாபர் ஆசம்.. இம்ரான் கான் உற்சாக வாழ்த்து

டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தானுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்

வாழ்த்துகள் பாபர் ஆசம்.. இம்ரான் கான் உற்சாக வாழ்த்து

உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் அணி வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரின் வாழ்வா? சாவா? அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.

சிட்னியில் புதன்கிழமை (நவ.9) நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் பாபர் ஆசம், முகம்மது ரிஸ்வான் ஜோடி 3ஆவது பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

இவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார் 1992 உலக கோப்பை கேப்டன் இம்ரான் கான். இது குறித்து அவர் ட்விட்டரில், “சிறப்பு மிக்க வெற்றியை தேடிதந்த கேப்டன் பாபர் ஆசம் மற்றும் அணி வீரர்களுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், இந்திய வீரர்கள் சுரேஷ் ரெய்னா, சஞ்சய் மஞ்ரேக்கர் உள்ளிட்டோரும் பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Tamil App.

Web Title: In big games big players stand up internet reacts to paks victory against nz in t20 world cup

Exit mobile version