Advertisment

ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் 2 பேரையுமே டீம்ல சேர்க்க வழி இருக்கு… அட இது நல்ல யோசனை ஆச்சே!

இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், 'ஹர்திக் பாண்டியா 5வது பந்துவீச்சாளராக விளையாடினால், ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் இந்தியாவின் ஆடும் லெவனில் பொருத்த முடியும்' என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
pant karthik Sunil Gavaskar Tamil News

Rishabh Pant and Dinesh Karthik will both be vying for game time against South Africa.

IND vs PAK T20 World Cup match: Dinesh karthik - Rishabh Pant - Sunil Gavaskar Tamil News: 8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நாளை முதல் (அக்டோபர் 22 ஆம் தேதி) தொடங்குகிறது. சிட்னியில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisment

நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை (அக்டோபர் 23 ஆம் தேதி) இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில், கிரிக்கெட்டில் பரம எதிரியாக பாகிஸ்தானை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சந்திக்கிறது. இந்தப் போட்டிக்காக முன்னாள் சாம்பியனான இந்தியா தீவிரமாக தயராகிறது.

publive-image

டி20 உலகக் கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் - கவாஸ்கர் கருத்து

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். 10 நாட்களுக்கு முன்னரே ஆஸ்திரேலிய பயணித்த அவரது தலைமையிலான உள்ளூர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. தொடர்ந்து இரண்டு அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடியது. இதில், ஆஸ்திரேலியா உடனான ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திற்காக களமாட கடுமையான வலைப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக களமாடும் இந்திய ஆடும் லெவன் குறித்து முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஆடும் லெவன் வீரர்கள் குறித்தும், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா ஐந்தாவது பந்துவீச்சாளராக விளையாடினால், ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் இந்தியாவின் ஆடும் விளையாடும் லெவன் அணியில் பொருத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

publive-image

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியான 'கிரிக்கெட் லைவ்' -ல் பேசிய கவாஸ்கர், "ஒருவேளை, அவர்கள் ஆறு பந்துவீச்சாளர்களுடன் செல்ல முடிவு செய்தால், ஹர்திக் பாண்டியா ஆறாவது பந்துவீச்சாளராக இருந்தால், அவரால் (பண்ட்) இடம் பெற முடியாமல் போகலாம்.

ஆனால் அவர்கள் ஐந்தாவது பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியாவுடன் செல்ல முடிவு செய்தால், ரிஷப் பண்ட் ஆறாவது இடத்தில் பேட் செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் கார்த்திக் ஏழாவது இடத்தில் இருக்கலாம். அதைத் தொடர்ந்து நான்கு பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே, அது நன்றாக நடக்கும். நாம் அதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அவர்கள் நிச்சயமாக நடுவில் ஒரு இடது கை ஆட்டக்காரரை விரும்புவார்கள். ஆனால் சிறந்த ஃபார்மில் இருக்கும் முதல் நான்கு பேரைப் பார்த்து, நீங்கள் சில சமயங்களில், 'ரிஷப் எத்தனை ஓவர்களில் விளையாடப் போகிறார்? அவர் மூன்று அல்லது நான்கு ஓவர்களைப் பெறப் போகிறாரா? மேலும் மூன்று அல்லது நான்கு ஓவர்களுக்கு கார்த்திக் அல்லது ரிஷப் சிறந்தவரா?’

எனவே, இவை அனைத்தும் அவர்கள் பார்க்கும் சூழ்நிலைகள். அதைப் பொறுத்து தான் அவர்கள் முடிவுகளை எடுப்பார்கள் , ”என்று அவர் கூறினார்.

publive-image

ஜாம்பவான் வீரர் கவாஸ்கர் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடியைப் பற்றியும் பேசினார், “அவரது உடற்தகுதி மற்றும் அவர் எவ்வாறு வடிவமைப்பார் என்பது அவர்களின் முக்கிய கவலையாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக, அவர் வீசிய இரண்டு ஓவர்களில், அவர் முழு உடற்தகுதிக்குத் திரும்பியதைக் காட்டினார்.

எனவே, தெளிவாக ஒரு தலைவலி போய்விட்டது. இங்கிலாந்துக்கு எதிராக நாம் பார்த்ததை விட, அவர்களின் கேட்ச்சிங் சிறப்பாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்.

அவர்களது மைதான பீல்டிங் நன்றாக இருந்தது. முன்பு இந்த இரண்டு அம்சங்களும் அவர்களை கவலையடையச் செய்தன. தற்போது அந்த பகுதிகளில் அவர்கள் முன்னேற்றம் காட்டியுள்ளனர். எனவே, அவர்கள் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடன் மோதும்போது அவர்களுக்கு எந்த சந்தேகமும் இருக்காது என்று நான் நினைக்கிறேன், ”என்று கவாஸ்கர் முடித்துக்கொண்டார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team T20 Indian Cricket Worldcup India Vs Pakistan Rishabh Pant Sunil Gavaskar Dinesh Karthik
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment