scorecardresearch

பாபர் அசாமை சந்தித்த கவாஸ்கர்: சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கடந்த அக்டோபர் 15 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவருக்கு இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நேரில் சென்று தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

பாபர் அசாமை சந்தித்த கவாஸ்கர்: சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?
India vs Pakistan: Sunil Gavaskar meeting Babar AZAM video goes viral Tamil News

Sunil Gavaskar  Babar AZAM – India vs Pakistan Tamil News: 8 – வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்று முன் தினம் முதல் (அக்டோபர் 16-ம் தேதி) ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. நவம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் களமாடியுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்தியா vs பாகிஸ்தான்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. எனவே, அந்த அணி வருகிற அக்டோபர் 23-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக தனது தொடக்க ஆட்டத்தில் விளையாடுகிறது. ஏற்கனவே நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது.

IND vs PAK T20 World Cup: பிளேயிங் லெவன் முடிவு செய்து விட்டோம் – ரோகித் சர்மா

இதேபோல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு மண்ணில் நடந்த டி-20 உலக கோப்பையில் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி இருந்தது. இதனால், அதே உத்வேகத்துடன் நடப்பு டி-20 உலக கோப்பையிலும் செயல்பட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தீவிரமாக தயராகி வருகிறது.

ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் – கேப்டன் பாபர் அசாம் சந்திப்பு

இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை நேரில் சந்தித்துள்ளார்.

கேப்டன் பாபர் அசாம் அக்டோபர் 15 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் அவருக்கு இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நேரில் சென்று தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தொப்பியில் கையொப்பமிட்ட பிறகு, கவாஸ்கரும் பாபர் அசாமும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக கவாஸ்கர் பாபர் அசாமுக்கு வாழ்த்து தெரிவித்தது மற்றும் அவருடன் உரையாடியது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் கேப்டனிடம் அவரது பிறந்தநாள் இன்றா அல்லது நேற்றா என்று கேட்டதற்கு, அது நேற்று என்று பதிலளித்தார். மேலும், கவாஸ்கர் அவருக்கு அறிவுரை கூறுவதையும் காண முடிந்தது. “உங்கள் ஷாட் தேர்வு நன்றாக இருந்தால், வேறு எந்த பிரச்சனையும் இல்லை” என்று அவர் கூறுவதை காணலாம். பின்னர் கவாஸ்கர் பாபர் அசாமுக்கு ஒரு தொப்பியில் கையெழுத்திட்டு நினைவு பரிசாக கொடுத்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Tamil App.

Web Title: Sunil gavaskar meets babar azam signs cap and gives advice video goes viral

Best of Express