Advertisment

IND vs ENG: டி20-யில் 4000 ரன்கள்… பிரமிக்கும் சாதனைகளை படைத்த கோலி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமாடிய இந்திய வீரர் விராட் கோலி பிரமிக்க வைக்கும் சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Virat Kohli becomes the first to score 4000 T20I runs Tamil News

Virat Kohli bats during the T20 World Cup cricket semifinal between England and India in Adelaide. (AP Photo)

T20 Match T20 World Cup - IND vs ENG - Virat Kohli Tamil News: 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisment

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 63 ரன்களும் கோலி 50 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடித்தது. இதனால், அந்த அணி இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் ரன் மழை பொழிந்த தொடக்க வீரர்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 4 பவுண்டர்கள் 7 சிக்ஸர்களுடன் 86 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 9 பவுண்டரிங்க்ள் 3 சிக்ஸர்களுடன் 80 ரன்களும் எடுத்தனர்.

பிரமிக்கும் சாதனைகளை படைத்த கோலி...

publive-image

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் களமாடிய இந்திய வீரர் விராட் கோலி பிரமிக்க வைக்கும் சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இந்த ஆட்டத்தில் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த விராட் கோலி, 4000 டி20 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும், இந்தியாவுக்காக டி-20 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தினார்.

மேலும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பேட் செய்த கோலி, அங்கு வெளிநாட்டு பேட்டர்களில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரர் பிரைன் லாரா 15 இன்னிங்ஸ்களில் 940 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில், இந்திய வீரர் கோலி தனது 15வது இன்னிங்சில் 950 ரன்களை கடந்து லாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

தவிர, டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் கோலி தனது நான்காவது அரை சதத்தை விளாசியுள்ளர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் மூன்று அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் முன்னாள் இந்திய கேப்டன் கோலி படைத்து அசத்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் விராட் கோலியின் ரன்கள் பின்வருமாறு:

72* vs தென் ஆப்ரிக்கா - மிர்பூர் - 2014

89* vs வெஸ்ட் இண்டீஸ் - மும்பை - 2016

50 vs இங்கிலாந்து - அடிலெய்டு - 2022

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Virat Kohli India Vs England Sports Cricket T20 Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment