Advertisment

உயிரை விட விளையாட்டு சீரியஸா போச்சா? அதுவும் அடிதடி வேற - 'பகீர்' வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Taiwan’s baseball teams engage in brawl, ignore social distancing viral video

Taiwan’s baseball teams engage in brawl, ignore social distancing viral video

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருளாதார சேதாரத்தையும் வருகிறது. உலகத்தில் பல நாடுகள் லாக் டவுன் அறிவித்து முடங்கி இருக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். உயிர்பலி ஒருபக்கம் அதிகரிக்க, பொருளாதார சரிவு காரணமாக பலருக்கும் வேலை இழக்கும் அபாயம் நிலவுகிறது.

Advertisment

அடிவயிற்றில் நெருப்பு வைத்தாற்போன்று ஒவ்வொரு நாடும் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க, தைவான் நாடு விளையாட்டு போட்டியை நடத்த, வீரர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தோனிக்கு இவ்ளோ குசும்பு ஆகாது; 2018 சம்பவத்துக்கு இதுதான் காரணம் - பிராவோ (வீடியோ)

சீனாவுக்கு நெருக்கமான நாடாக இருந்தாலும், கொரோனா வைரஸ் அதிகம் பரவாமல் பார்த்துக் கொண்டது தைவான். வெறும் 422 பேருக்கு மட்டுமே பாதிப்பு, 6 பேர் மட்டுமே பலி என மற்ற நாடுகளை விட ஓரளவு பாதுகாப்பான நிலையிலேயே உள்ளது தைவான். அதனால் இயல்பு நிலைக்கு கொஞ்சம், கொஞ்சமாக வரலாம் என நினைத்து இருந்தனர். அதன் ஒரு பகுதியாக அந்த நாட்டின் பிரபல பேஸ்பால் லீக் தொடருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதில், ப்யூபான் கார்டியன்ஸ் - ராகுட்டன் மங்கிஸ் அணிகள் மோதின. அப்போது ப்யூபான் அணி வீரர் பந்தை எடுத்து எதிரணி வீரர் குயோ என்-வென் மீது வீசினார்.

அவர்கள் இருவரும் உடனே மோதலில் ஈடுபட, அதைக் கண்ட இரு அணி வீரர்களும் வேகமாக ஓடி களத்துக்குள் வந்தனர். ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுக் கொண்டு கூடி நின்று சண்டையிட்டனர். அந்தக் காட்சியை கண்ட ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

'இம்ரான் கானை விட பாகிஸ்தானில் பிரபலம் நம்ம லக்ஷ்மிபதி பாலாஜி தான்' - நெஹ்ரா பெருமிதம்

கொரோனா வைரஸ் நெருக்கமாக இருக்கும் பட்சத்தில் அதிகமாக பரவும் என கூறப்படும் நிலையில், அதெல்லாம் கண்டு கொள்ளாமல் பேஸ்பால் வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டது அதிர்ச்சி சம்பவமாக அமைந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment