Advertisment

ECE படித்தால் கிராண்ட் மாஸ்டர் கூட ஆகலாம் - ரோல் மாடலான சென்னை பையன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
G Akash, Ameya Audi,Chess,K Visweswaran,M Pranesh, ஜி ஆகாஷ், செஸ் கிராண்ட் மாஸ்டர், விளையாட்டு செய்திகள்

G Akash, Ameya Audi,Chess,K Visweswaran,M Pranesh, ஜி ஆகாஷ், செஸ் கிராண்ட் மாஸ்டர், விளையாட்டு செய்திகள்

தமிழகத்தைச் சேர்ந்த ஜி ஆகாஷ், நாட்டின் 66 வது செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

Advertisment

சமீபத்தில் நடைபெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) இரண்டாவது கவுன்சில் கூட்டத்தில் ஆகாஷின் கிராண்ட்மாஸ்டர் தலைப்பு உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் எம்.பிரனேஷ் மற்றும் கோவாவின் அமேயா ஆடி ஆகியோர் சர்வதேச மாஸ்டர் பட்டங்களை பெற்றனர்.

'2 அணிகளால் இந்தியாவை அதன் மண்ணில் அடக்க முடியும்' - பிராட் ஹாக் ஜோசியம் பலிக்குமா?

FIDE மதிப்பீடு 2495 பெற்ற ஜி ஆகாஷ், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனது உடனடி நோக்கம் FIDE மதிப்பீட்டை 2600 ஆக உயர்த்துவதாகும் என்று கூறினார்.

"இந்தியாவில் உள்ள கிராண்ட் மாஸ்டர்களின் பட்டியலில் சேருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு ஒரு சிறப்பு தருணம். நான் தொடர்ந்து உழைக்க வேண்டும், எனது மதிப்பீட்டை என்னால் முடிந்தவரை 2600 ஆக உயர்த்துவதே எனது ஒரே நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

2012 இல் தேசிய பட்டத்தை வென்று பின்னர் ஐ.எம் பட்டத்தை பெற்ற ஆகாஷ், 2014 இல் பொறியியல் பட்டம் பெற ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். அவர் 2018 இல் மீண்டும் வந்து தனது விருப்பமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை சம்பாதிக்க கடுமையாக உழைத்தார்.

"நான் பொறியியல் பட்டம் பெற விளையாட்டிலிருந்து நேரத்தை எடுத்துக் கொண்டேன், 2018 இல் திரும்பி வந்து எனது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றேன்," என்றார்.

publive-image

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டதாரியான ஆகாஷ், முன்னாள் தேசிய சாம்பியனான சென்னையைச் சேர்ந்த வீரர் கே விஸ்வேஸ்வரனிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

நீங்க நல்லவரா? கெட்டவரா? - இந்திய ரசிகர்களை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி

அனைத்து விளையாட்டு வீரர்களையும் போலவே, ஆகாஷ் கோவிட் -19 லாக் டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மேலும் அவர் போட்டிகள் விளையாடுவதைத் தவறவிடுவதாகவும், இயல்புநிலை திரும்பும் வரை காத்திருப்பதாகவும் கூறினார்.

சென்னையைச் சேர்ந்த பிரனேஷ் இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை ஓபன் 2019 மற்றும் டெல்லி ஓபன் ஆகியவற்றில் தனது அற்புதமான ஆட்டத் திறமையால் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment