Advertisment

பறக்கும் பாவையாக மாறிய இந்திய வீராங்கனை: கிரிக்கெட் உலகமே அதிசயிக்கும் அபார கேட்ச் வீடியோ

Tamil Crickt News Update : இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீராங்களை பிடித்த கேட்ச் பெருமளவில் பாராட்டை பெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
பறக்கும் பாவையாக மாறிய இந்திய வீராங்கனை: கிரிக்கெட் உலகமே அதிசயிக்கும் அபார கேட்ச் வீடியோ

Indian Women Cricket Great Catches Against England Women's Team : இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஹார்லீன் தியோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பறந்து சென்று கேட்ச் செய்த விதம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Advertisment

கிரிக்கெட் போட்டிகளில்  சமீப காலங்களாக சிக்சர் லைனில் பறந்து சென்று கேட்ச் செய்யும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. அதிலும் டி20 போட்டிகள் வந்ததில் இந்த மாதியான கேட்ச்களை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம். சிக்சருக்கு செல்லும் பந்தை பறந்து சென்று கேட்ச் செய்யும்போது, நிலை தடுமாறி லைனில் விழும் நிலை ஏற்பட்டால், பந்தை மைதனத்திற்கு உள்ளே வீசிவிட்டு சிக்சர் லைனில் விழுந்து மீண்டும் மைதானத்திற்கு உள்ளே வந்து அந்த பந்தை பிடிப்பார்கள். இது மாதிரியான நிகழ்வுகள் ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் விமர்சகர்களும் வெகுவாக பாராட்டுவது உண்டு

பொதுவாக ஆண்கள் போட்டிகளில் மட்டுமே நடைபெற்று வந்த இந்நிகழ்வு தற்போது மகளிர் போட்டிகளிலும் நடைபெற தொடங்கியுள்ளது. ஆண்களுக்கு நாங்கள் ஒன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில்,  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்களை ஹார்லீன் தியோல் இங்கிலாந்தின் ஆமி எலன் ஜோன்ஸை தனது சிறப்பான கேட்ச் மூலம் வெளியேற்றியுள்ளார். அவரின் இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது. நார்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த்து.

இதன் படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி  19 வது ஓவரில் 4 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது, அந்த அணியின் முன்னணி வீராங்களை ஆமி ஜோன்ஸ் 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து விளையடிக்கொண்டிருந்தார்,. அப்போது கடைசி ஓவரை வீசிய இந்தியாவின் ஷிகா பாண்டேவின் பந்தை லாங்-ஆஃப் திசை நோக்கி அடித்தார். அந்த பந்து சிக்சருக்கு பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிக்சர் லைனில் நின்றுகொண்டிரந்த ஹார்லீன் பந்தை பிடித்தார். ஆனால் அவர் எல்லைக்கோட்டை தாண்டிச்செல்லும் நிலை ஏற்பட்டதால், பந்தை மைதனத்திற்கு உள்ளே தூங்கிப்போட்டுவிட்டு அவர் எல்லைக்கோடு வெளியில் சென்று மீண்டும் உள்ளே வந்து பந்தை பிடித்தார். இதனால் ஆமி ஜோன்ஸ் அரைசதம் அடிக்கும் வாய்பை இழந்து வெளியேறினார்.

இதன் மூலம் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் பிடிக்கப்பட்ட மிக சிறந்த கேட்சாக இது பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. களத்தில் இத்தகைய புத்திசாலித்தனம் இருந்தபோதிலும், இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் மழை காரணமாக டக்வொர்த் லூயஸ் முறையில் 18 ரனகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.  இங்கிலாந்து 20 ஓவர்களில் 177/7 ரன்கள் எடுத்த்து. தொடர்ந்து 178 ரனக்ள இலக்குடன் களமிறங்கிய இந்தியா 8.4 ஓவர்களில் 54/3 ஐ மட்டுமே அடைய முடிந்தது. இந்திய அணி தோல்வியடைந்தாலும், ஹார்லீனின் மிகச்சிறந்த கேட்ச் இந்திய ரசிகர்களுக்கு சிறப்பம்சமாக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment