Tamil Thalaivas vs Dabang Delhi Match 2019: சிறந்த வீரர்கள் இருந்தும் கடந்த சீசனில் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ் அணி, இம்முறை வலிமையான X-Factors கொண்டு களமிறங்கி இருக்கிறது. அதன் முதல் பலனை, தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நம்மால் காண முடிந்தது.
39-26 என்ற புள்ளி கணக்கில் டைட்டன்ஸை வீழ்த்தி, ஸ்டெடி ஃபர்ஸ்ட் கியர் போட்டிருக்கிறது தமிழ் தலைவாஸ். கேப்டன் அஜய்தாகூர், ராகுல்சவுத்ரி, சபீர்பாபு, மஞ்சித்சில்லர், ரான்சிங், மோகித்சில்லர் போன்ற பல கேம் சேஞ்சர்கள் அணியில் இருப்பதால், அதிகபட்ச கான்ஃபிடன்ட்டோடு இன்று தபாங் டெல்லி அணிக்கு எதிராக களமிறங்குகிறது தமிழ் தலைவாஸ் அணி.
தமிழ் தலைவாஸின் ரெய்டு டிபார்ட்மென்ட் அதிக பலத்தோடு இருக்கும் அதே வேளையில், தபாங் டெல்லி அணியின் டிஃபன்ஸ் மிக பலவீனமாக இருக்கிறது. இதனால், இன்றைய போட்டியில் தலைவாஸ் கைகளே வெற்றிச் சின்னத்தை காட்டும் என உறுதியாக நம்பலாம்.
ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD சேனலில் போட்டியை லைவாக காணலாம். அதேபோன்று, ஆன்லைனில் ஹாட்ஸ்டார் மூலம் இப்போட்டியை காணலாம்.