Tamil Thalaivas vs Haryana Steelers Match 2019: இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு, கட்டாய வெற்றியை நோக்கி இன்று களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி, இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதுவரை மூன்று போட்டிகளில் ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் முதல் போட்டியில் வெற்றிப் பெற்றாலும், தபாங் டெல்லி கேசி மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளிடம் தோற்றிருக்கிறது. இதில்,டெல்லி அணியிடம் ஒரு புள்ளி வித்தியாசத்தில் கடைசி நிமிடத்தில் தோற்றது ஏற்றுக் கொள்ளவே முடியாத தோல்வி எனலாம்.
கேப்டன் அஜய்தாகூர், ராகுல்சவுத்ரி, சபீர்பாபு, மஞ்சித்சில்லர், ரான்சிங், மோகித்சில்லர் போன்ற பல கேம் சேஞ்சர்கள் அணியில் இருப்பதால், நம்பிக்கை குறையாமல் இன்று ஹரியானா அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் களமிறங்கியது.
பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD சேனலில் போட்டியை லைவாக காணலாம். அதேபோன்று, ஆன்லைனில் ஹாட்ஸ்டார் மூலம் இப்போட்டியை காணலாம்.
இந்நிலையில், இப்போட்டியில் 35-28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளது. நான்கு போட்டிகளில் ஆடியுள்ள தலைவாஸுக்கு இது இரண்டாவது வெற்றியாகும்.