Advertisment

பேக் டூ பேக் ஷோ... ஆனால் படம் ஃபிளாப்! தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி!

Pro Kabaddi League 2019, Tamil Thalaivas vs Telugu Titans: தமிழ் தலைவாஸ் அணி 12 ஆட்டங்களில் மூன்று வெற்றி, ஏழு தோல்வி, 2 டிரா என 26 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil thalaivas vs telugu titans pro kabaddi league 2019 - பேக் டூ பேக் ஷோ... ஆனால் படம் ஹிட் மட்டும் ஆக மாட்டேங்குது! டைட்டன்ஸை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்

tamil thalaivas vs telugu titans pro kabaddi league 2019 - பேக் டூ பேக் ஷோ... ஆனால் படம் ஹிட் மட்டும் ஆக மாட்டேங்குது! டைட்டன்ஸை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்

Tamil Thalaivas vs Telugu Titans: புரோ கபடி 7வது சீசனில் இன்று(செப்.2) பெங்களூருவில் உள்ள ஶ்ரீ கந்தீரீவா ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.‌

Advertisment

முன்னதாக, நேற்று நடந்த பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் 33-27 என்ற புள்ளிகள் கணக்கில் படுதோல்வி அடைந்து ரசிகர்களை ஏமாற்றியது. தமிழ் தலைவாஸ் ரெய்டர்கள் ஒவ்வொரு முறையும் ரசிகர்களை ஏமாற்றுவதையே வாடிக்கையாய் வைத்திருக்கின்றனர். அர்ஜீனா விருதினை வென்ற தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் டீமில் தான் இருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு அவரது பெர்ஃபாமான்ஸ் உள்ளது. கடந்த சில போட்டிகளில் சொதப்பிய நட்சத்திர ரெய்டர் ராகுல் சௌத்ரி நேற்றைய ஆட்டத்தில் 'ஓகே ஓகே' ரகம் காட்டினார்.

தமிழ் தலைவாஸ் நட்சத்திர டிபென்டர் மன்ஜீத் சில்லர் எதிரணியின் பவான் ஷேராவத்-ஐ தனி ஒருவராக பிடித்து அசத்தினார்‌. ஆனால், ரெய்டுகளில் தலைவாஸ் சொதப்ப பெரும் புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. தவிர, மன்ஜீத் சில்லர் தவிர சொல்லிக் கொள்ளும்படியான டிஃபன்ஸ் இல்லை.

தமிழ் தலைவாஸ் அணி 12 ஆட்டங்களில் மூன்று வெற்றி, ஏழு தோல்வி, 2 டிரா என 26 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருந்தது.

இந்நிலையில், இன்றைய தலைவாஸ் - டைட்டன்ஸ் இடையேயான ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் 35 - 30 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்து தனது எட்டாவது ஏமாற்றத்தை பதிவு செய்தது.

Tamil Thalaivas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment