Tamil Thalaivas vs UP Yoddha Match 2019: இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இரண்டாவது வெற்றியை பதிவு செய்த தமிழ் தலைவாஸ் அணி, இன்று யுபி யோத்தா அணியுடன் மோதியது.
நான்கு போட்டிகளில் ஆடியிருந்த தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் வெற்றிப் பெற்றாலும், தபாங் டெல்லி கேசி மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளிடம் தோற்றது. ஆனால், ஹரியானா அணிக்கு எதிராக 35-28 என கம் பேக் கொடுத்த தமிழ் தலைவாஸ், இன்று யுபி யோத்தா அணியிடம் மோதியது.
பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு அரங்கில் இப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில், இரு அணிகளுமே தலா 28 புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் டிராவானது. இரு அணிகளுமே தலா 13 ரெய்டு புள்ளிகள் பெற்றன. டேக்கில் செய்ததில் யுபி அணி 12 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் 10 புள்ளிகளும் பெற்றன.
இப்போட்டி டிராவானதால், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு தமிழ் தலைவாஸ் முன்னேறியது. 5 ஆட்டங்களில், 2 வெற்றி, 2 தோல்வி, 1 டிரா என 18 புள்ளிகளுடன் தலைவாஸ் அடுத்த போட்டியை எதிர்நோக்குகிறது.