Advertisment

VIVO Pro Kabaddi League 2019: யுபி அணியுடனான ஆட்டம் டிரா... 5வது இடத்துக்கு முன்னேறிய தமிழ் தலைவாஸ்

இரு அணிகளுமே தலா 13 ரெய்டு புள்ளிகள் பெற்றன. டேக்கில் செய்ததில் யுபி அணி 12 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் 10 புள்ளிகளும் பெற்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil thalaivas vs UP Yoddha pro kabaddi when and where to watch - VIVO Pro Kabaddi League 2019: அதே மாஸ்... அதே கெத்து... மீசையை இன்று மீண்டும் முறுக்க காத்திருக்கும் தமிழ் தலைவாஸ்!

tamil thalaivas vs UP Yoddha pro kabaddi when and where to watch - VIVO Pro Kabaddi League 2019: அதே மாஸ்... அதே கெத்து... மீசையை இன்று மீண்டும் முறுக்க காத்திருக்கும் தமிழ் தலைவாஸ்!

Tamil Thalaivas vs UP Yoddha Match 2019: இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இரண்டாவது வெற்றியை பதிவு செய்த தமிழ் தலைவாஸ் அணி, இன்று யுபி யோத்தா அணியுடன் மோதியது.

Advertisment

நான்கு போட்டிகளில் ஆடியிருந்த தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் வெற்றிப் பெற்றாலும், தபாங் டெல்லி கேசி மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளிடம் தோற்றது. ஆனால், ஹரியானா அணிக்கு எதிராக 35-28 என கம் பேக் கொடுத்த தமிழ் தலைவாஸ், இன்று யுபி யோத்தா அணியிடம் மோதியது.

பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு அரங்கில் இப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில், இரு அணிகளுமே தலா 28 புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் டிராவானது. இரு அணிகளுமே தலா 13 ரெய்டு புள்ளிகள் பெற்றன. டேக்கில் செய்ததில் யுபி அணி 12 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் 10 புள்ளிகளும் பெற்றன.

இப்போட்டி டிராவானதால், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு தமிழ் தலைவாஸ் முன்னேறியது. 5 ஆட்டங்களில், 2 வெற்றி, 2 தோல்வி, 1 டிரா என 18 புள்ளிகளுடன் தலைவாஸ் அடுத்த போட்டியை எதிர்நோக்குகிறது.

Pro Kabaddi Tamil Thalaivas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment