Advertisment

தீபாவளி விருந்து ரத்து... இந்திய வீரர்களுக்கு ராகுல், ரோகித் சொன்னது என்ன?

இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, இந்தியா அணி வீரர்களுக்காக ஒரு பிரம்மாண்டமான தீபாவளி விருந்துக்கு திட்டமிட்டிருந்தது.

author-image
WebDesk
New Update
IND vs AUS T20 Series: 3 options to fill Jadeja void

IND vs AUS T20 Series - india team

ஐசிசி டி20 உலககோப்பை தொடரில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சிட்னியில் நடைபெற இருந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது.

Advertisment

ஐசிசி டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் பங்கேற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த இரு தினங்களுக்கு முன்பு (அக் 23) தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று பாகிஸ்தானை வீழ்த்தியது.

முன்னாள் 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட்கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். அதே சமயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பெரிய வெற்றி பெற்றாலும் இந்த வெற்றியை பிரமாண்டமாக கொண்டாட வேண்டாம் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அணி வீரர்களிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

publive-image

வரும் வியாழன் அன்று (அக் 27) இந்தியா நெதர்லாந்து அணிகளுக் இடையிலான போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்தியா அணி வீரர்களுக்காக ஒரு பிரம்மாண்டமான தீபாவளி விருந்துக்கு திட்டமிட்டிருந்தது. இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற வற்றி மற்றும் தீபாவளி பண்டிகை ஆகியவற்றை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற வேண்டாம் என்று பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கூறியுள்ளதை தொடர்ந்து, அதற்கு பதிலாக, வீரர்கள் சிட்னிக்கு வந்த பிறகு, இரவு உணவிற்கு தங்கள் குடும்பத்தினருடன் வெளியே செல்வதற்காக ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது. இதில் விராட்கோலி மற்றும் ரோகித் சர்மா போன் மூத்த வீரர்கள் தெளிவாக உள்ளனர்.

போட்டிக்குப் பிந்தைய சந்திப்பில், வீரர்கள் முன்னேறி அணியின் நீண்ட கால இலக்கை மனதில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுளளது. மேலும் இந்த வெற்றி நல்ல தொடக்கமாக இருக்கிறது அணி இங்கிருந்து அதை தொடர வேண்டும். போட்டி இன்னும் முடிவடையவில்லை, எனவே களமிறங்க தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாக அணியின் துணை ஊழியர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.

publive-image

சிட்னியில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் இந்திய அணிக்காக கிராண்ட் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் சிட்னி நகரம் கூட தீபாவளிக்கு தயாராகி விட்டது, சின்னமான சிட்னி ஓபரா ஹவுஸ் சிவப்பு நிறத்தில் ஒளிரும். ஆனால் மூத்தவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி கிராண்ட் பார்ட்டியை ரத்து செய்ய முடிவு செய்து, சிட்னியை அடைந்த பிறகு குடும்பத்தினருடன் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை இந்திய அணி எப்படி கொண்டாடியது?

அற்புதமான வெற்றிக்குப் பிறகு வீரர்கள் தங்களுக்கு அன்பானவர்களிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்றனர். கேக் வெட்டவில்லை, வெற்றியை ரசிக்க வெளியே செல்லவில்லை. மாறாக, போட்டியின் நட்சத்திரங்கள் மெல்போர்னில் உள்ள ஹோட்டலை அடைந்தவுடன் உடனடியாக தங்கள் அறைகளுக்குச் சென்றனர். விராட் கோலியும், ஹர்திக் பாண்டியாவும் ஊடகங்களை சந்தித்த பிறகு கடைசியாக தங்கள் அறைகளை அடைந்தனர்.

தொடர்ந்து இந்திய வீரர்கள் இன்று காலை சிட்னியை அடைந்தனர். விடுமுறை நாளாக இருந்ததால், சிலர் தங்கள் ஜிம்மிற்கு செல்ல முடிவு செய்தனர். சில வீரர்கள் தங்கள் மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் இரவு உணவிற்கு வெளியே சென்றனர். பெரும்பாலானோர் தீபாவளியை சொந்தமாக கொண்டாட முடிவு செய்தனர்.

publive-image

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு விராட் கோலி என்ன சொன்னார்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலிதான் எனது சிறந்த இன்னிங்ஸ் என்று இன்று வரை நான் எப்போதும் கூறி வருகிறேன். ஆனால் இன்று நான் விளையாட்டின் அளவு மற்றும் நிலைமை என்ன என்பதை இந்த போட்டியில் காட்டியுள்ளேன். இந்த போட்டி எனது சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. ஹர்திக் எனக்கு ஊக்கம் கொடுத்தார். ரசிகர்கள் அதிகளவு இருந்தனர். நீங்கள் தொடர்ந்து என்னை ஆதரித்தீர்கள், உங்கள் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ”என்று விராட் கோலி கூறினார்.

விராட் கோலி குறித்து ரோகித் சர்மா?

நிச்சயமாக அவரது சிறந்தவர். ஆனால் நாங்கள் இருந்த சூழ்நிலையிலிருந்து - வெற்றியுடன் வெளியே வர இது இந்தியாவின் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அவருடைய சிறந்ததல்ல. ஏனெனில் 13வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் மிகவும் பின்தங்கியிருந்தோம், மேலும் தேவையான ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. ஆனால் அந்த ஸ்கோரைத் துரத்துவது விராட்டின் மிகச் சிறந்த முயற்சியாகும், இதில் ஹர்திக் பாண்டியாவும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்தார் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment