சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டன்! கடைசிவரை அசராத ரோஹித்! (வீடியோ)

'சும்மா இருந்திருந்தா அவனே அவுட்டாயி போயிருப்பான்' மொமன்ட் !

“ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சப்போர்ட் பண்ணலாமா… இல்ல மும்பைக்கு இந்தியன்ஸுக்கு சப்போர்ட் பண்ணலாமா-னு குழப்பமாக இருக்கு. இப்போ ரோஹித் மட்டும் சிக்ஸ் அடிச்சிட்டா, நான் மும்பைக்கு மாறிடுறேன்”

“நிறைய Poms(பொமேரனியன் நாய்கள்) ராயல்ஸ் அணியில் ஆடுதுங்க-ல….”

“நீ எல்லா டீமுக்காவும் விளையாடியிருக்க போல….”

பெங்களூரை தவிர..

“அப்படியா!?”

இந்த உரையாடல்கள் அனைத்தும் இன்று நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது பேசப்பட்டவை.

ஆஸ்திரேலிய கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன், பேட்டிங் செய்து கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவை உசுப்பேற்றி அவுட்டாக்குவதற்காக சீண்டிய வார்த்தைகள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக புஜாரா 106, விராட் கோலி 82, மாயங்க் அகர்வால் 76 ரன்கள் எடுத்தனர்.

லோ ஆர்டரில் சிறப்பாக ஆடிய ரோஹித் ஷர்மா 114 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து, அணி 400 ரன்களைக் கடக்க உதவினார்.

அதிரடி வீரரான ரோஹித், இன்று சற்று பொறுமையாக ஆடியதால், அவரை உசுப்பேற்ற நினைத்த டிம் பெய்ன், ஸ்டெம்புகளுக்கு அருகில் நின்றுக் கொண்டு, “ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சப்போர்ட் பண்ணலாமா… இல்ல மும்பைக்கு இந்தியன்ஸுக்கு சப்போர்ட் பண்ணலாமா-னு குழப்பமா இருக்கு. இப்போ ரோஹித் மட்டும் சிக்ஸ் அடிச்சிட்டா, நான் மும்பைக்கு மாறிடுறேன்” என்றார்.

மேலும், இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்சை குறிப்பிடும் விதமாக, “நிறைய Poms(பொமேரனியன் நாய்கள்) ராயல்ஸ் அணியில் ஆடுதுங்க-ல….” என்று அருகில் நின்றுக் கொண்டிருந்த ஃபின்ச்சிடம் நக்கல் செய்த பெய்ன், “நீ எல்லா டீமுக்காவும் விளையாடியிருக்க போல….” என்று மீண்டும் ரோஹித்தை வம்புக்கு இழுத்தார்.

அதற்கு ‘பெங்களூரை தவிர’ என்று ஃபின்ச் பதிலளிக்க, “அப்படியா…!?” என்று பெய்ன் கூற, இவையனைத்தும் ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது.

ஆனால், பெய்னின் எந்த சீண்டலுக்கும் அசராத ரோஹித், சிரிப்பை மட்டும் பதிலாக அளித்து, கடைசி வரை நிதானமாக விளையாடி நாட் அவுட்டாக 63 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

‘சும்மா இருந்திருந்தா அவனே அவுட்டாயி போயிருப்பான்’ மொமன்ட் !

மேலும் படிக்க – சர்பிரைஸ் முடிவெடுத்த விராட் கோலி! புரிந்து கொண்டு பதுங்கிய ஆஸ்திரேலியா

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close