Advertisment

தக தகக்கும் அஷ்வினின் ரிவன்ஜ் எபிசோட்! மதுரைக்கு காத்திருக்கும் ராவான சவால்!

நாளை(ஆக.13) திண்டுக்கல்லில் நடைபெறும் 'குவாலிஃபயர் 2' ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதுகின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpl 2019 qualifier 2 madurai panthers vs dindugal dragons - தக தகக்கும் அஷ்வினின் ரிவன்ஜ் எபிசோட்! மதுரைக்கு காத்திருக்கும் ராவான சவால்!

tnpl 2019 qualifier 2 madurai panthers vs dindugal dragons - தக தகக்கும் அஷ்வினின் ரிவன்ஜ் எபிசோட்! மதுரைக்கு காத்திருக்கும் ராவான சவால்!

டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் ஹாட் செஷனை எட்டியுள்ளது. இறுதிப் போட்டிக்கு, முன்னேறப் போகும் இரண்டாவது அணி எது என்பதில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

நான்காவது டிஎன்பிஎல் கிரிக்கெட் டி20 தொடர், கடந்த ஜூலை 19ம் தேதி தொடங்கியது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்ற இத்தொடரில்,

திண்டுக்கல் டிராகன்ஸ்,

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,

மதுரை பேந்தர்ஸ்,

விபி காஞ்சி வீரன்ஸ்

ஆகிய நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. ஐபிஎல் தொடரில் நடத்தப்படும் அதே முறை தான் டிஎன்பிஎல் கிரிக்கெட்டிலும் பின்பற்றப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் 'குவாலிஃபயர் 1' போட்டியில் மோதும். இதில், வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். அதேசமயம், தோற்கும் அணி, 3வது மற்றும் 4ம் இடத்தைப் பிடித்த அணிகள் மோதும் 'எலிமினேட்டர்' போட்டியில் வெல்லும் அணியுடன் மோதும்.

இவ்விரு அணிகளும் 'குவாலிஃபயர் 2' போட்டியில் மோதும். அதில் வெல்லும் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அதன்படி, டிஎன்பிஎல் 2019 குவாலிஃபயர் 1 போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் - கௌஷிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த கில்லீஸ், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

பின்னர் 170 ரன்கள் இலக்கை துரத்திய திண்டுக்கல் அணியால், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதேபோல், நேற்று இரவு நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் மதுரை, காஞ்சி அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுக்க, சேஸிங் செய்த மதுரை அணி, பரபரப்பான கட்டத்தில் கடைசி பந்தில் 152 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றிப் பெற்றது.

இதனால், நாளை(ஆக.13) திண்டுக்கல்லில் நடைபெறும் 'குவாலிஃபயர் 2' ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி, வருகிற 15-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்ளும்.

கடந்த சீசனில், இறுதிப் போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணியிடம் தோற்று கோப்பையை நழுவவிட்டது அஷ்வினின் திண்டுக்கல் அணி. ஆகையால், அதற்கு பழித் தீர்க்கும் வகையில் இம்முறை அரையிறுதிப் போட்டியில் மதுரை அணியை திண்டுக்கல் வெளியேற்றுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tnpl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment