கிரிக்கெட்: பிச்சு பிச்சு செய்திகள்!

நாளை (ஞாயிறு) பயிற்சியில் ஈடுபடவுள்ள சென்னை அணிக்கு உங்கள் விசில்களை உரித்தாக்க வர வேண்டாமா?

*பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஐபிஎல்-ல் இந்தாண்டு விளையாட, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு பதில் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், வார்னருக்கு மாற்று வீரராக இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஹைதராபாத் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வார்னரால் வாழ்வு தன்னை யார்-என்று

நிரூபிக்க வார்-ல் இடம்

*மும்பையில் நடைபெற்ற பெண்கள் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. AUSW 209/4 (20.0 Ovs),  ENGW 152/9 (20.0 Ovs)

பந்தால் பேரிழந்து நொந்து நூலானாம்

பெண்ணால் பெற்ற சிறப்பு.

*ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி 129 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 438 ரன்கள் எடுத்துள்ளது.

*சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று (மார்ச் 31) பயிற்சியில் ஈடுபடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டரில், “இன்று சென்னை அணி பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால், நீங்கள் நேசிப்பவர்களுடன் இன்று நேரத்தை செலவிடுங்கள். ஏனெனில், நாளை (ஞாயிறு) பயிற்சியில் ஈடுபடவுள்ள சென்னை அணிக்கு உங்கள் விசில்களை உரித்தாக்க வர வேண்டாமா?

*சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், இன்று சென்னை வந்தடைந்து அணியுடன் இணைந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், ‘வணக்கம் சென்னை’ என்று தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பதிவு செய்துள்ளார்.

*ஸ்டார் மற்றும் ஏர்டெல்லின் ஒப்பந்தத்தின் படி ஏர்டெல் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் இனி தடங்கலின்றி Vivo IPL மற்றும் அனைத்து ஸ்டார் நிகழ்ச்சிகளையும் காணலாம் என ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

*சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் தோனி, ரெய்னா, ஹர்பஜன், ஜடேஜா, இம்ரான் தாகிர் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். அப்போது தோனி, நிகழ்ச்சியின் மேடையில் பைக்கில் என்ட்ரி ஆனார். அவர் உள்ளே இருந்து பைக்கை ஸ்டார்ட் செய்து, மேடைக்கு வரும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close