Advertisment

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி: 41 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை

ஏற்கனவே இந்திய வீரர்கள் 3 பதக்கங்களை பெற்ற நிலையில் நான்காவது பதக்கத்தை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது இந்திய ஹாக்கி அணி.

author-image
WebDesk
New Update
Olympics 2020, Indian Hockey team, Bronze medal

Indian hockey team beat Germany : இன்று காலை டோக்கியோவில், ஒலிம்பிக் வெண்கல பதக்கத்திற்காக ஜெர்மனி மற்றும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பலப்பரீட்சை மேற்கொண்டனர். இதில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது. ஏற்கனவே இந்திய வீரர்கள் 3 பதக்கங்களை பெற்ற நிலையில் நான்காவது பதக்கத்தை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது இந்திய ஹாக்கி அணி.

Advertisment

1980ம் ஆண்டுக்கு பிறகு, ஹாக்கி போட்டியில் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது இந்திய அணி. பிரதமர் நரேந்திர மோடி “வரலாற்று நிகழ்வு. இந்த நாள் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் மிக முக்கியமான நாளாக இருக்கும். இந்திய தேசம் ஹாக்கி அணியை நினைத்து வெற்றி கொள்கிறது. இந்தியாவிற்கு வெண்கல பதக்கத்தை வென்று வரும் ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து

மொத்த நாடும் உங்களின் வெற்றியை நினைத்து பெருமை கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சி தலைவரும், வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை ஜெர்மன் அணி மேற்கொண்டது. இரண்டாம் பகுதி ஆட்டத்தின் துவக்கத்தில் 1க்கு 3 என்ற கோல் கணக்கில் களம் இறங்கியது இந்திய அணி. இந்தியாவின் ஹரிதிக் சிங் மற்றும் ஹர்ம்ப்ரீத் சிங் ஆகியோரின் தலா ஒரு கோல்கள் போட்டியை 3-3க்கு என்ற சமநிலையை உருவாக்கியது.

8 முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஜெர்மனி அணி மூன்றாம் பகுதி ஆட்டத்தை சிறப்பாக துவங்கி வைத்தாலும், இந்தியாவின் ருபீந்தர் பால் சிங் மற்றும் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் அடித்த இரண்டு கோல்கள் 5-3க்கு என்ற நிலையை உருவாக்கியது. இறுதி பகுதி ஆட்டத்தில் ஜெர்மன் அணி மேலும் ஒரு கோல் அடிக்க முயல ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இருப்பினும் அதற்கு மேல் அந்த அணியால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. 5-3-க்கு என்று போட்டியை வென்று 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை உறுதி செய்தது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tokyo Olympics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment