Advertisment

டோக்கியோ ஒலிம்பிக்: விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி

‘Covid-19 case found at athletes’ village Tamil News: ஒலிம்பிக் போட்டி நடக்கும் டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது போட்டியில் கலந்து கொள்ள உள்ள வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிராமத்தில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tokyo olympics Tamil News: Covid-19 case found at athletes’ village

Tokyo olympics Tamil News: ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23 ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் இந்த போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படவுள்ளது.

Advertisment

முன்னதாக போட்டியை காண 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி நடக்கும் டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகின் மிக முக்கிய பிரபலங்கள் என ஆயிரம் பேர் மட்டுமே தொடக்கவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜப்பான் பேரரசர் நரிஹிட்டோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் தங்கி உள்ள ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த நபர் ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்க உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வீரர்கள் கிராமத்தில் ஏற்பட்ட முதல் பாதிப்பு இதுதான் என்று டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ தெரிவித்துள்ளார். இருப்பினும், தோஷிரோ முட்டோ அந்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை வெளியிடவில்லை. மேலும் அவர் அந்த நபர் 14 நாள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

"தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது சாத்தியமான ஒன்றே என்று நாம் கருத வேண்டும். டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் ஒலிம்பிக்கின் போது சுமார் 11,000 விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்." என்று அவர் கூறியுள்ளார்.

ஜூலை 1 முதல் சனிக்கிழமை வரை, தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட 44 பேர் நேர்மறை சோதனை செய்துள்ளதாக ஒலிம்பிக் அமைப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால் "அவர்களில் யாரும் ஒலிம்பிக் கிராமத்தில் வசிக்கும் நபர்கள் இல்லை, பெரும்பாலானவர்கள் டோக்கியோ 2020 இன் ஒப்பந்தக்காரர்களாகவும், விளையாட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.” என்கிறார்கள்.

இந்த பட்டியலில் ஜூலை 14 அன்று நேர்மறை சோதனை செய்த ஒரு தடகள வீரர் மற்றும் ஊடகத்தின் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். 44 பேரில் 12 பேர் மட்டுமே ‘ஜப்பானில் வசிக்காதவர்கள்’ என்று பட்டியலிடப்பட்டுள்ளனர். பயிற்சி முகாம்களில் டோக்கியோவிலிருந்து விலகி இருந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த பட்டியலிலிருந்தும் அவர்களின் கணக்கியலிலிருந்தும் விலக்கப்பட்டுள்ளனர் என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

டோக்கியோ அதிகாரிகள் சனிக்கிழமை நிலவரப்படி கிராமத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அங்கு நேற்று வெள்ளிக்கிழமை புதியதாக கொரோனா பாதிக்கப்பட்டார்களின் எண்ணிக்கை 1,271 ஆக பதிவாகியுள்ளன. அவை ஒரு வாரத்திற்கு முன்பு 822 ஆக இருந்தன. அதோடு, இது முந்தைய வாரத்தை விட அதிகமாக இருந்த 27 வது நாளைக் குறிக்கிறது. வியாழக்கிழமை புதியதாக பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,308 ஆக பதிவாகி இருந்தது. இது ஆறு மாதங்களில் அதிகமாகும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Sports Tamil Sports Update Tokyo Olympics Olympics Japan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment