5 வயது மகனைக் கொன்ற பிரபல கால்பந்து வீரர் – அதிர்ச்சியில் விளையாட்டு உலகம்

COVID-19 தொற்று சந்தேகத்தின் பேரில் பெற்ற மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது கொன்றதை ஒப்புக்கொண்ட கால்பந்து வீரரை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 32 வயதான செவர் டோக்டஸ் எனும் அந்த கால்பந்து வீரர், தானே போலீசில் சரணடைந்து, தனது மகன் காசிமை மே 4 அன்று தலையணையால் கொன்றதாக ஒப்புக் கொண்டார் என அரசு நடத்தும் அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சிஎஸ்கே – மும்பை மிக்ஸிங் பிளேயிங் XI – உங்கள் ஆப்ஷன் வீரர்கள் யார்? […]

turkey football player, cevher toktas, turkish football player kills son, turkey murder, football player kills son, football news, sports news, விளையாட்டு செய்திகள்
turkey football player, cevher toktas, turkish football player kills son, turkey murder, football player kills son, football news, sports news, விளையாட்டு செய்திகள்

COVID-19 தொற்று சந்தேகத்தின் பேரில் பெற்ற மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது கொன்றதை ஒப்புக்கொண்ட கால்பந்து வீரரை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

32 வயதான செவர் டோக்டஸ் எனும் அந்த கால்பந்து வீரர், தானே போலீசில் சரணடைந்து, தனது மகன் காசிமை மே 4 அன்று தலையணையால் கொன்றதாக ஒப்புக் கொண்டார் என அரசு நடத்தும் அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

சிஎஸ்கே – மும்பை மிக்ஸிங் பிளேயிங் XI – உங்கள் ஆப்ஷன் வீரர்கள் யார்? (வீடியோ)

சிறுவனின் மரணம் ஆரம்பத்தில் சந்தேகத்திற்குரியது என்று நம்பப்படவில்லை, இருப்பினும் அவனுக்கு COVID-19 க்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வெளியேற்றப்பட்டதாக அனடோலு தெரிவித்துள்ளது.

தற்போது அமெச்சூர் லீக் அணியான பர்சா யில்டிரிம்ஸ்போருடன் விளையாடும் டோக்டஸ், தனது மகனை தன்னை நேசிக்காததால் மூச்சுத் திணற வைக்க முயற்சித்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாகவும், 11 நாட்கள் கழித்து தன்னை போலீசில் சரணடைந்து வருத்தம் தெரிவித்ததாகவும் ஹேபர்டுர்க் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுவன் வடமேற்கு மாகாணமான புர்சாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஏப்ரல் 23 அன்று இருமல் மற்றும் அதிக காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது தந்தையுடன் சிறுவன் தனிமையில் வைக்கப்பட்டார்.

‘சச்சின் அவுட்டாகக் கூடாதென இதயம் எப்போதும் துடிக்கும்’ – முன்னாள் பாக்., கேப்டன்

இந்த நிலையில் தான் அவர் கொல்லப்பட்டுள்ளார். சோதனை தேதி எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

2007 மற்றும் 2009 க்கு இடையில், டோக்டஸ் ஹேசெட்டெப் கால்பந்து அணிக்காக விளையாடினார், இந்த அணி துருக்கிய உயர்மட்ட சூப்பர் லீக்கில் பங்கேற்று விளையாடியது போட்டியிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Turkish footballer confesses to killing son who was in hospital with suspected corona virus

Next Story
ஐபிஎல் 2017: பிளேஆஃப் சுற்று கெஸ்ஸிங்…..
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com