Advertisment

நிறைவேறியது தந்தையின் கனவு... சி.எஸ்.கே-வில் இடம்பிடித்த இளம் வீரர் நெகிழ்ச்சி!

அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். எங்களை விட அவர் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.

author-image
WebDesk
New Update
நிறைவேறியது தந்தையின் கனவு... சி.எஸ்.கே-வில் இடம்பிடித்த இளம் வீரர் நெகிழ்ச்சி!

பவா, துல், ஹங்கர்கெகர்

19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.

Advertisment

கொரோனாவால் கடந்த 2020-ஆம் ஆண்டு இவரது தந்தை உயிரிழந்தார்.

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அந்த அணியின் கேப்டன் தோனியின் கேப்டன்ஷிப்பும் ராஜ்வர்தனின் தந்தைக்கு மிகவும் பிடிக்குமாம்.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்த பேட்டியில், எனது தந்தைக்கு சிஎஸ்கே அணி மிகவும் பிடிக்கும். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். எங்களை விட அவர் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அவர் எங்கிருந்தாலும் என்னை ஆசிர்வதிக்கட்டும். என்னிடம் வார்த்தைகளே இல்லை. பணத்தை விட விளையாடுவது தான் எனக்கு முக்கியம். நான் நன்றாக விளையாடினால் பணம், புகழ் எல்லாம் தேடி வரும். எனவே, நான் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன். கேப்டன் தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வேன்  என்றார்.

வேகப்பந்து வீச்சாளர் ராஜ் அங்கத் பவா, யு-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றவர் ஆவார்.

இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

எனக்கு மிகவும் பிடித்த தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவை சந்திக்க உள்ளேன் என்பதை நினைக்கும்போதே ஆர்வமாக உள்ளேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளப் போகிறேன் என்றார்.

ராஜ் அங்கத் பவாவின் தந்தை சுக்வீந்தர் கூறுகையில், பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே. அவரிடம் இருந்து ராஜ் நிறைய கற்றுக் கொள்ள முடியும் என்றார்.

யு-19 இந்திய அணியின் கேப்டனாக உலகக் கோப்பையை வென்று தந்த அதிரடி வீரர் யஷ் துல் ரூ.50 லட்சத்துக்கு டெல்லி கேபிட்டல் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

யு-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர்கள் ஐபிஎல் போட்டிக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஐபிஎல் போட்டியில் விளையாட 19 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் பல வீரர்களால் ஏலத்தில் கலந்து கொள்ள முடிவில்லை.

துல்லின் பயிற்சியாளர் பிரதீப் கோச்சர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

துல்லின் கவனம் சிதறிவிடக் கூடாது. அவருக்கு கிடைத்த திடீர் புகழால் ஆட்டத்தில் கவனம் செலுத்திவிடாமல் போய்விடக் கூடாது.

சீனியர் லெவலில் அளிக்கப்படும் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்த யு-19 வீரர்கள் எத்தனையோ பேரை அவருக்கு உதாரணமாக எடுத்துக் கூறியிருக்கிறேன். இனி அவரது மனதை கட்டுப்படுத்தி ஆட்டத்தில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும் என்றார்.

ஹங்கர்கெகரின் பயிற்சியாளர் மோகன் ஜாதவ் கூறுகையில்,

தோனியின் கண்களை மட்டும் கூர்ந்து கவனித்தால் போதும்

கிரிக்கெட்டில் பல விஷயங்களை அவரால் கற்றுக் கொள்ள முடியும்.  ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டுமென்பது பலரது கனவு. சில பதற்றமான சூழலை எதிர்கொள்ள நேரிடும். ஆனாலும் மனதளவில் அவர் மிகவும் வலிமையானவர் என்பதால் அவரால் எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். அவரது தந்தை இறந்த பிறகு அவர் எப்படி செல்படுகிறார் என்பதை நான் பார்த்துக் கொண்டு வருகிறேன். அவர் மனதிடம் உடையவர் என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment