இதுவரை யாரும் பார்க்காத 'சடையன்' தோனியின் பழைய ஸ்டில்! வைரலில் நம்பர்.1

இதுவரை யாரும் பார்க்காத பழைய தோனியின் மாஸ் ஸ்டில் வெளியாகியுள்ளது

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு தோனி என்ற ஒரு இளைஞன் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன போது, அவனது ஆட்டத்தை விட அனைவரையும் அதிகம் கவர்ந்தது அவனது நீண்ட கூந்தல் தான். அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கூட தோனியின் லாங் ஹேர் ஸ்டைலுக்கு ரசிகராக இருந்தார்.

ஆனால், பாப்புலர் ஆன பிறகு திடீரென ஒருநாள் தனது முடியை கத்தரித்துவிட்டார் தோனி. அதற்கு அவர் சொன்ன பதிலும் சுவாரஸ்யமானது. ‘முடியை பராமரிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது. அது எனக்கு சிரமமாக உள்ளது’ என்றார்.

இன்று சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தோனி வலம் வருகிறார். இந்த நிலையில், இன்று பழைய ‘சடையன்’ தோனியின் மாஸ் ஸ்டில் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஒரு பாக்ஸர் ரேஞ்சிற்கு ‘தல’ தோனி போஸ் கொடுத்துள்ளார்.

×Close
×Close