India vs Australia Test Series, Virat Kohli Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், டெல்லியில் நடந்த 2வது டெஸ்டின் போது இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்த நேரத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை பார்த்து ரசிகர்கள் ‘ஆர்சிபி… ஆர்சிபி…’ என்று குரல் எழுப்பினர். இது அவர் தனது நாட்டிற்காக விளையாடும் விளையாட்டு, ஐபிஎல் அணிக்காக அல்ல என்பதை உணர்ந்தவராக கோலி, முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டு, தனது இந்திய அணியின் ஜெர்சியை சுட்டிக்காட்டி ரசிகர்களை இந்தியாவுக்காக கோஷமிட தூண்டினார். அதன்பின் ரசிகர்கள், ‘இந்தியா இந்தியா’ என்று குரல் எழுப்பினர்.
கோலி ரசிகர்களை இந்தியாவுக்காக கோஷமிட தூண்டிய அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் விராட் கோலியின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
Crowd was chanting 'RCB, RCB' – Virat Kohli told to stop it and chant 'India, India'. pic.twitter.com/kMd53wbYRU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 20, 2023
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றியை ருசித்த நிலையில், அடுத்ததாக 3வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil