Advertisment

முன்னாள் உரிமையாளராக இருந்தாலும் அணியின் தோல்வியை கண்டு பொங்கிய விஜய் மல்லையா! ஆர்.சி.பி பற்றி போட்ட ட்வீட்!

கடைசி இடம் வருவோர்க்கு கொடுக்கப்படும் கிண்டலானப் பரிசு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Mallya tweet

Vijay Mallya tweet

Vijay Mallya tweet : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி அட்டவனையில் கடைசி இடம் பிடித்து 2019 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முடித்துள்ளதை அந்த அணியின் முன்னாள் உரிமையாளரில் ஒருவரான விஜய் மல்லையா விமர்சித்துள்ளார்.

Advertisment

ஐபிஎல் 2019 ஆம் ஆண்டு சீசனில் ஆரம்பத்தில் இருந்தே கடுமையான விமர்சனங்களை சந்தித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி , சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று ஹைதராபாத் அணியின் பிளே ஆஃப் வைப்பை கேள்விக்குறியாகியது

மற்றொரு மோசமான ஐபிஎல் தொடராக பெங்களூரு அணிக்கு இந்தாண்டு அமைந்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆர்.சி.பி அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை வுட்டன் ஸுபூன் எனக் கூறி அணியின் முன்னாள் உரிமையாளர்களின் ஒருவரான விஜய் மல்லையா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

கடைசியாக பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு 2016 ஐபிஎல் தொடரில் தகுதி பெற்றது. அந்த சீசனில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 4 சதங்களுடன் 973 ரன்களை விளாசித் தள்ளினார். ஆனால் இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது.

பெங்களூரு அணியின் இந்த மோசமான ஆட்டத்தை தொடர்ந்து, இந்தியாவில் பண மோசடி செய்து விட்டு லண்டனில் வசிக்கும் விஜய் மல்லையா டிவிட்டரின் தனது அனுதாபத்தை பெங்களூரு அணிக்கு தெரிவித்துள்ளார். பெங்களூரு அணி நிர்வாகம் விஜய் மல்லையா பற்றிய அனைத்து தகவல்களையும் அணியின் வலைதளத்திலிருந்து நீக்கியிருந்தாலும், தனது முன்னாள் அணியை மறக்கவில்லை.

இதுக் குறித்து விஜய் மல்லையா பதிவிட்டிருக்கும் ட்வீட்டில் “ பெரிய லைன் அப் என்பது காகிதத்தில் மட்டுமே. வுட்டன் ஸ்பூன் பரிசினால் மனம் உடைந்து போனேன். ’ எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். வுட்டன் ஸ்பூன் என்பது போட்டிகளில் கடைசி இடம் வருவோர்க்கு கொடுக்கப்படும் கிண்டலானப் பரிசு போன்றது.

Ipl News Rcb Vijay Mallya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment