Advertisment

ஜாகீர் கான் - சகாரிகா ரிசப்ஷனில் நடனமாடிய 'சேட்டைப் பையன்' விராட் கோலி! (வீடியோ)

பொதுவாக நண்பர்களின் திருமணங்களுக்குச் செல்லும் விராட் கோலி, அங்கு ஒரு அட்டகாசமான டான்ஸை போடுவது வழக்கம்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜாகீர் கான் - சகாரிகா ரிசப்ஷனில் நடனமாடிய 'சேட்டைப் பையன்' விராட் கோலி! (வீடியோ)

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுக்கும், பாலிவுட் நடிகை சகாரிகா காட்கேவுக்கும் கடந்த 23-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. எளிமையான முறையில் பதிவுத்திருமணமாக நடைபெற்றது.

Advertisment

ஜாகிர் கான் 14 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். சகாரிகா 7 பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஷாருக் கான் நடித்த 'சக் தே இந்தியா' படத்தில் சகாரிகா ஒரு கிரிக்கெட் வீரரை திருமணம் செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதைப் போலவே, நிஜ வாழ்க்கையிலும் அவர் கிரிக்கெட்டரான ஜாகீர் கானை மணந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நவம்பர் 27-ம் தேதி மும்பையில் உள்ள தாஜ் பேலஸில் இவர்களது ரிசப்ஷன் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, தனது காதலியான அனுஷ்கா ஷர்மாவுடன் வந்தார். அதேபோல், யுவராஜ் - அவரது மனைவி ஹேசல் கீச், சுரேஷ் ரெய்னா - அவரது மனைவி பிரியங்கா சௌத்ரி, சானியா மிர்சா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். பொதுவாக நண்பர்களின் திருமணங்களுக்குச் செல்லும் விராட் கோலி, அங்கு ஒரு அட்டகாசமான டான்ஸை போடுவது வழக்கம்.

ஹர்பஜன், யுவராஜ் திருமணங்களின் போது கோலியின் டான்ஸ் வைரல் ஆனது. அதேபோல், நேற்று ஜாகீர் கானின் ரிசப்ஷனிலும் விராட் கோலி டான்ஸ் ஆடியிருக்கிறார். இதை, உடனிருந்த காதலி அனுஷ்கா ஷர்மா ரசிக்க, கூடவே புது மாப்பிள்ளை ஜாகீர் கானும் ஆட்டத்தைப் போட, ரிசப்ஷன் களை கட்டியது. அதுகுறித்த புகைப்படங்களும், வீடியோவும் தற்போது வைரல் ஆகிறது...

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

India Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment