கோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா!

தல தோனி பெட்ஸ், பைக், கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக பைக்குகள் மீது வெறித்தனம் கொண்டவர் தோனி. அவரது பைக் வெரைட்டிகளை அடுக்கவே தனி கேரேஜ் வைத்திருக்கிறார்.  அதேபோல், கேப்டன் விராட் கோலியும் இதற்கு சற்றும் குறைந்தவர் அல்ல. ஆனால், இவரது காதல் பைக்குகளை…

By: January 18, 2020, 7:42:14 PM

தல தோனி பெட்ஸ், பைக், கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக பைக்குகள் மீது வெறித்தனம் கொண்டவர் தோனி. அவரது பைக் வெரைட்டிகளை அடுக்கவே தனி கேரேஜ் வைத்திருக்கிறார்.


அதேபோல், கேப்டன் விராட் கோலியும் இதற்கு சற்றும் குறைந்தவர் அல்ல. ஆனால், இவரது காதல் பைக்குகளை தாண்டி கார்கள் மீது தான். அதிலும், ஆடி கார்கள் கோலியின் பெஸ்ட்டி எனலாம்.

இந்தியாவின் எவர்கிரீன் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் பாபு நட்கார்னி மரணம் : பிரபலங்கள் இரங்கல்

கோலியிடம், ஆடி Q7, ஆடி RS5, ஆடி RS6, ஆடி A8 L, ஆடி R8 V10 LMX, பெண்ட்லே காண்டினண்டல் ஜிடி மற்றும் ரேஞ் ரோவர் வோக் என்று எண்ணற்ற சொகுசு கார்களை வரிசைக்கட்டி அடுக்கி வைத்திருக்கிறார்.

தற்போது, புதியதாக ஒரு ஆடி காரை வாங்கியுள்ளார் விராட் கோலி. அந்த கார், அண்மையில் தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கடந்த 15ம் தேதி பொங்கல் அன்று விற்பனைக்கு வந்த ஆடி கியூ8 ஆடம்பர எஸ்யூவி கார் தான் அது.

இந்த காரை இந்தியாவிலேயே முதன்முதலாக வாங்கியிருப்பவர் விராட் கோலி தானாம். ஆடம்பரமான எஸ்யூவி ரக காரான கியூ8, இதுவரை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களில் மிகவும் விலை உயர்ந்த மாடலாகும்.

இதில் 3.0 லிட்டர் டர்போ ஃப்யூவெல் ஸ்டார்ட்டிஃபைடு இஞ்ஜெக்‌ஷன் கொண்ட எஞ்சின் உள்ளது. துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 6 விநாடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த கார், 340 பிஎச்பி பவர் மற்றும் 500 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

தோனி பெயர் இல்லாத பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்; ‘தல’யை இப்படியா வழியனுப்புவது? ரசிகர்கள் ஆதங்கம்!

இந்தியாவில் கடந்த 15ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஆடி கியூ8 காருக்கு ரூ. 1.33 கோடி (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Virat kohli becomes first owner of audi q8 suv

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X