Advertisment

களத்தில் முட்டி மோதிய கோலி - கம்பீர்… இத்தனை லட்சம் அபராதமா?

கோலி ஒருபுறமும் கம்பீர் ஒருபுறமுமாக சில அடிகள் நடந்து சென்ற நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்திலே வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Virat Kohli, Gautam Gambhir fined 100% match fees for breaching IPL code of conduct, LSG vs RCB Tamil News

Virat Kohli, Gautam Gambhir engage in a heated war of words during RCB vs LSG match Tamil News

IPL 2023: Virat Kohli, Gautam Gambhir fined 100 percent fees after verbal spat, Naveen-ul-Haq cops 50 percent fine Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று (திங்கள் கிழமை) இரவு லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது.

Advertisment

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 44 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படியுங்கள்: ‘சத்தம் வரக்கூடாது…’: கம்பீருக்கு லக்னோவில் கோலி பதிலடி

தொடர்ந்து 127 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மேயர்ஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் ஆயுஷ் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

கோலி - கம்பீர் மோதல்

publive-image

இந்த ஆட்டத்திற்குப் பிறகு, மைதானத்தில் இரு அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி லக்னோ அணியின் தொடக்க வீரர் கெயில் மேயர்ஸ் உடன் நடந்து கொண்டே பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் குறுக்கிட்ட லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கெயில் மேயர்ஸின் கையைப் பிடித்துக் கொண்டு கோலி விட்டு விலகி அவரை கூட்டிச் சென்றார்.

இதையும் படியுங்கள்: ‘சத்தம் வரக்கூடாது…’: கம்பீருக்கு லக்னோவில் கோலி பதிலடி

கோலி ஒருபுறமும் கம்பீர் ஒருபுறமுமாக சில அடிகள் நடந்து சென்ற நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்திலே வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் அங்கு குவிந்த நிலையில், இருவரையும் விலக்க கடுமையாக முயற்சித்தனர். இருவரும் கராசரமாக பேசிக்கொண்ட போது, லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட, அங்கிருந்தவர்கள் இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர்.

publive-image

இருப்பினும், மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, ஆட்டத்தின் 17வது ஓவரின் போது லக்னோ வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கும், பெங்களூரு வீரர் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அபராதம்

இந்த நிலையில், லக்னோ - பெங்களூரு இடையேயான போட்டியில் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்: ‘சத்தம் வரக்கூடாது…’: கம்பீருக்கு லக்னோவில் கோலி பதிலடி

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காகவும் ஐபிஎல் நடத்தை விதிகளின்படி லெவல் 2 குற்றங்களை ஒப்புக்கொண்டதால் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், விராட் கோலியுடன் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கு 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி, கவுதம் கம்பீர், நவீன் உல் ஹக் ஆகியோருக்கு ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ள அபராதத் தொகை பின்வருமாறு:

விராட் கோலி - 1.07 கோடி (100%).

கவுதம் கம்பீர் - 25 லட்சம் (100%).

நவீன் உல் ஹக் - 1.79 லட்சம் (50%).

இதையும் படியுங்கள்: ‘சத்தம் வரக்கூடாது…’: கம்பீருக்கு லக்னோவில் கோலி பதிலடி

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Virat Kohli Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Lucknow Super Giants Royal Challengers Bangalore Gautam Gambhir Rcb
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment