அனுஷ்காவுடன் அமெரிக்காவில் விடுமுறை கொண்டாடும் கேப்டன் விராட்!

இந்த இளம் காதல் ஜோடியின் படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட்!

ஒருவழியாக இந்தா… அந்தா… என்று இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுவிட்டார். பவுலிங் கோச்சாக ஜாஹீர் கானும், முக்கிய வெளிநாட்டுத் தொடர் ஆலோசகராக டிராவிட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர் சவுரவ் கங்குலி, “அமெரிக்காவில் உள்ள விராட் கோலி, இந்தியா திரும்பியவுடன் அவருடன் ஆலோசனை நடத்திய பின் பயிற்சியாளர் குறித்து அறிவிக்கப்படும். ஏனெனில், இதில் கேப்டனின் கருத்து மிகவும் முக்கியம்” என்றார்.

ஆனால், நிர்வாகிகள் குழு, பயிற்சியாளர் யார் என்பதை உடனே அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தியது. அதன்படி, நேற்று இரவு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த உடனேயே, அமெரிக்காவிற்கு பறந்துவிட்டார் கேப்டன் விராட் கோலி. இந்நிலையில், அங்கு விடுமுறையை அவர் தனது காதலியும்,நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கழித்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது. கோலியும், அனுஷ்காவும் அமெரிக்க வீதிகளில் உலவும் படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சில படங்களை, அனுஷ்காவே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அப்புறமென்னா, இந்த இளம் காதல் ஜோடியின் படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட்!.

இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20-ல் விளையாடுகிறது.

×Close
×Close