Advertisment

World Cup 2019: விராட் கோலிக்கு காயம்... சிக்கலில் இந்திய அணி! No.3க்கான பேக்-அப் பேட்ஸ்மேன் யார்?

இவரது கியூட் சதம், அணியில் இவரை லாக்-இன் செய்யும் பாஸ்வேர்டாக அமைகிறது

author-image
Anbarasan Gnanamani
Jun 02, 2019 14:14 IST
New Update
virat kohli left thumb injury ind vs sa cwc 2019 - World Cup 2019: சிக்கலில் விராட் கோலி... கட்டை விரலில் காயம்! No.3க்கான பேக்-அப் பேட்ஸ்மேன் யார்?

virat kohli left thumb injury ind vs sa cwc 2019 - World Cup 2019: சிக்கலில் விராட் கோலி... கட்டை விரலில் காயம்! No.3க்கான பேக்-அப் பேட்ஸ்மேன் யார்?

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடர், கடந்த 30ம் தேதி ஹை டோனில் தொடங்கினாலும், லோ பிட்சில் சுவாரஸ்யம் இன்றி சென்றுக் கொண்டிருகிறது. ஒன்சைட் கேமாக முடிவுகள் அமைவது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தாலும், வரும் 5ம் தேதி இந்திய அணி, தென்னாப்பிரிக்கவை எதிர்கொள்ளவிருக்கும் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது..

Advertisment

ஆனால், சற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நேற்று(ஜூன்.1) நடந்த பயிற்சியின் போது கேப்டன் விராட் கோலியின் இடது கட்டை விரலில் காயம் ஏற்பட, அவர் முதல் போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விரலில் காயம் ஏற்பட்டவுடன், இந்திய அணியின் பிஸியோ பாட்ரிக் ஃபர்ஹத், உடனடியாக கோலிக்கு சிகிச்சை அளித்தார். விரலில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிதாக பயம் கொள்ளும் காயம் இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், ஒரு மட்டையாளனுக்கு கட்டை விரல் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவர். அதிலும், விராட் கோலி போன்ற மிக முக்கிய வீரர்கள் காயத்தில் சிக்குவது என்பது இந்தியா கற்பனை செய்து பார்க்கக் கூடாத ஒன்று.

ஒருவேளை, கோலிக்கு இந்த காயம் குணமாகவில்லை எனில், அவருக்கு பதில் 3ம் நிலை வீரராக களமிறங்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்,

லோகேஷ் ராகுல்

இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை 'Proved Batsman' லோகேஷ் ராகுல். வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சிப் போட்டியில், இவரது கியூட் சதம், அணியில் இவரை லாக்-இன் செய்யும் பாஸ்வேர்டாக அமைகிறது. குறிப்பாக, வங்கதேச ஃபேஸ் பவுலர்களை இவர் டீல் செய்த விதம் மாஸ். ஸ்டெம்புக்களை விட்டு விலகி இவர் அடித்த ஷாட்களின் டைமிங் அபாரம். உடல் மொழியும் பக்கா. ஸோ, லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

தினேஷ் கார்த்திக்

அனுபவம்... பக்குவம்... தகவமைப்பு... இந்த மூன்று ஒருசேர பெற்றிருப்பதால் தான் தினேஷ் கார்த்திக்குக்கு இந்த உலகக் கோப்பையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை அவர் நிரூபிக்க மற்றுமொரு அருமையான களமாக 3rd ஸ்லாட் அமையும். விராட் கோலியின் பேக்-அப் ரோலுக்கு, சீனியர் என்ற அடிப்படையிலும், தனக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போதெல்லாம் இம்ப்ரெஸ் செய்தவர் என்ற அடிப்படையிலும் நிச்சயம் தினேஷ் செட் ஆவார் என நம்பலாம்.

விஜய் ஷங்கர்

இப்படியொரு வாய்ப்பு கிடைத்தால், உலகத்தில் விஜய் ஷங்கரை விட அதிரஷ்டசாலி யாரும் இருக்க முடியாது, உலகில் விஜய் ஷங்கரை விட டென்ஷனான ஆள் யாரும் இருக்க முடியாது. உலகக் கோப்பைத் தொடரில், கேப்டன் விராட் கோலியின் ஸ்லாட்டில் ஒரு இளம் வீரன் களமிறங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமா!! ஆனால், விஜய்யிடம் அந்த திறமை இருப்பதால் தான் அவர் மேல் நம்பிக்கை வைத்து உலகக் கோப்பைக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஆட முடியாமல் போய், விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவரை உற்சாகப்படுத்த நாம் சொல்ல விரும்புவது, கிங் கோலி சொன்ன அந்த வார்த்தைகள் தான்,

No cricket team in the world depends on one or two players. The team always plays to win.

#Virat Kohli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment