சச்சின் சாதனைகளை அடுத்தடுத்து தகர்த்தெறியும் விராட் கோலி!

சச்சின் டெண்டுல்கர் 259 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து முதலிடத்தில் இருந்துவந்தார். நீண்ட காலமாக இருந்து வந்த இச்சாதனையை விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார்

மெகா மாஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார் விராட் கோலி. ஆம்! ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 10,000 ரன்களை கடந்து பல ரெக்கார்டுகளை முறியடித்துள்ளார் விராட் கோலி.

இந்தியா, இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது.

கேப்டன் விராட் கோலி இறுதிவரை அவுட்டாகாமல் 157 ரன்கள் விளாசினார். இது அவரது 37வது ஒருநாள் சதமாகும்.

அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்களை கடந்தும் உலக சாதனை புரிந்திருக்கிறார். 205 இன்னிங்ஸில் விராட் கோலி 10,000 ரன்களை கடந்துள்ளார்.

முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 259 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து முதலிடத்தில் இருந்துவந்தார். நீண்ட காலமாக இருந்து வந்த இச்சாதனையை விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் கங்குலி உள்ளார். அவர் 263 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,000 ரன்களை கடந்தார்.

அதுமட்டுமின்றி, இன்று தனது 37வது ஒருநாள் சதத்தை அடித்த விராட் கோலி, அதற்காக எடுத்துக் கொண்ட மேட்சுகளின் எண்ணிக்கை 213.

இதே 37வது ஒருநாள் சதத்தை அடிக்க சச்சின் எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 330.

127 மேட்சுகளுக்கும் முன்னதாகவே, விராட் கோலி 37 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்துவிட்டார். ஒவ்வொரு நாளும் பல கிரிக்கெட்டர்களின் சாதனைகளை விராட் கோலி முறியடித்து வரும் நிலையில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் ரெக்கார்டுகளை அசால்ட்டாக தகர்த்தெறிந்து வருகிறார் விராட் கோலி.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close