மகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி

இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், கடந்த பிப்ரவரி மாதம் ‘பண்டஸ்லிகா’ (Bundesliga) லீக் தொடரில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றிருந்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு மற்றும் பயணக்கட்டுப்பாடு காரணமாக ஜெர்மனியில் முடங்கினார். இந்நிலையில் இந்தியாவில் விமான பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால், ஜெர்மனியில் இருந்து டெல்லி வழியாக…

By: June 7, 2020, 2:36:41 PM

இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், கடந்த பிப்ரவரி மாதம் ‘பண்டஸ்லிகா’ (Bundesliga) லீக் தொடரில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றிருந்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு மற்றும் பயணக்கட்டுப்பாடு காரணமாக ஜெர்மனியில் முடங்கினார்.

இந்நிலையில் இந்தியாவில் விமான பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால், ஜெர்மனியில் இருந்து டெல்லி வழியாக கடந்த மே 30ல் பெங்களூரு வந்தடைந்தார். அங்கு, மத்திய, மாநில அரசாங்க வழிகாட்டுதலின் படி 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட ஆனந்த், நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

மர்மம்… மார்க்கெட்டிங்… மகேந்திர சிங் தோனி – ஸ்டோக்ஸ் புத்தகமும், பாகிஸ்தான் சலம்பலும்

இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், ” நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். எனது குடும்பத்தினரை சந்தித்ததில் மகிழ்ச்சி; எனது மகனை சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி” என்றார்.


பிப்ரவரியில் பண்டஸ்லிகா செஸ் லீக்கில் விளையாட ஆனந்த் ஜெர்மனியில் இருந்தார், மார்ச் மாதம் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், COVID-19 வைரஸ் பரவல், உலகெங்கிலும் விளையாட்டு கால அட்டவணையை சீர்குலைத்ததைத் தொடர்ந்து அங்கேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு அவர் பிராங்பேர்ட்டுக்கு அருகில் தங்கியிருந்தார்.

ஆனந்த் பெங்களூருவில் தனது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நன்றி தெரிவித்து எழுதுகையில், “நன்றி @tajmgroad. மிகவும் வசதியான தங்குமிடம். நாம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அது இனிமையானது .. மருத்துவ பரிசோதனைகள் கூட மிகச் சிறப்பாக செய்யப்பட்டன. மீண்டும் திரும்பி வந்து உங்கள் விருந்தோம்பலை அனுபவிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்

ஆனந்த் மனைவி அருணா கூறுகையில், ”112 நாட்களுக்கு பின் ஆனந்த் வீட்டிற்கு வந்துள்ளார். இவரை கண்டதில் மகிழ்ச்சி. எங்கள் மகன் அகில் மிகவும் உற்சாகமடைந்தார்.

அரசாங்க வழிகாட்டுதலின் படி தனி ரூமில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்,” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Viswanathan anand reunites with family chennai covid 19 tamil nadu cases

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X