Advertisment

ஏன் டிக்ளேர்? வார்னரின் '400 ரன்கள்' சாதனை மிஸ்... கேப்டன் பெய்னை விளாசும் ரசிகர்கள் - நடந்தது என்ன?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
warner 335 not out vs pakistan tim paine slammed for declare - வார்னரின் 400 ரன்கள் சாதனை மிஸ்... கேப்டன் பெய்னை விளாசும் ரசிகர்கள்! நடந்தது என்ன?

warner 335 not out vs pakistan tim paine slammed for declare - வார்னரின் 400 ரன்கள் சாதனை மிஸ்... கேப்டன் பெய்னை விளாசும் ரசிகர்கள்! நடந்தது என்ன?

'கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல' என்பது போல், டிம் பெய்ன் மீது கடும் காண்டில் இருக்கிறார்கள் டேவிட் வார்னர் ரசிகர்கள். உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களும் கூட...

Advertisment

அடிலைடில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று (நவ.30) தொடங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், ஓப்பனர் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு ஓப்பனர் டேவிட் வார்னரும் மார்னஸ் லேபஸ்காகன் ஜோடி மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 361 ரன்கள் சேர்த்தனர். மார்னஸ் 162(238) ரன்களில் அவுட்டானாலும், வார்னர் சதம், இரட்டை சதம் கடந்து முச்சதம் எடுத்து உச்சி முகர்ந்தார்.

வாயா.. வாயா... 2018ல் நீ பட்ட அவமானத்துக்கும், சிந்திய கண்ணீருக்கும் இன்னும் ரங்க ரங்கமான பதில் சொல்லுயா....

418 பந்துகளில் 335 ரன்கள் குவித்து, 'சும்மா கிழி' மாடுலேஷன் கொஞ்சமும் குறையாமல் களமாடிக் கொண்டிருந்த வார்னர், நிச்சயம் 400 ரன்களை கடந்து இன்று ஒரு புதிய சரித்திரம் படைக்கப் போகிறார் என்று உலகம் முழுவதுமான கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்க, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் திடீரென டிக்ளேர் செய்துவிட்டார்.

அப்போது ஆஸ்திரேலிய எடுத்த ஸ்கோர், 589-3 (127  ஓவர்களில்).

இன்னும் இரண்டு மணி நேரம் விளையாடியிருந்தால், வார்னர் நிச்சயம் பிரைன் லாராவின் 400 ரன் எனும் அல்ட்ரா ரெக்கார்டை தகர்த்திருப்பார். ஆனால், ரசிகர்களின் அந்த ஆவலை கேப்டன் டிம் பெய்ன் தகர்த்துவிட்டார்.

30, 2019

30, 2019

30, 2019

30, 2019

ரசிகர்கள் ஒருபக்கம் கேப்டன் பெய்னை விளாசிக் கொண்டிருக்க, எதற்காக அவர் டிக்ளேர் செய்தார் என்று நாம் ஆராய்கையில், வானிலை ஒரு முக்கிய காரணி என்று சொல்லப்படுகிறது. மற்றபடி, வார்னர் மீது பொறாமையோ, வேண்டுமென்றோ பெய்ன் அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில், 334 ரன்கள் அடித்திருந்த டான் பிராட்மேன் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோரின் சாதனையை வார்னர் கடக்க வேண்டும் என்பதற்காக பொறுமையாக காத்திருந்து, வார்னர் 335 ரன்கள் எடுத்த பிறகே பெய்ன் டிக்ளேர் செய்துள்ளார்.

400 ரன்கள் அடிக்க கூடுதலாக எப்படியும் ஒருமணி நேரம் ஆகும் என்பதால், வானிலையை கருத்தில் கொண்டு அவர் டிக்ளேர் செய்ததாகவே கூறப்படுகிறது.

பகலிரவு டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்த அணிகள்

589/3* - AUS vs PAK, அடிலைட் 2019

579/3d - PAK vs WI, துபாய் 2016

514/8d - ENG vs WI, பிர்மிங்கம் 2017

பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர்

365* - கேரி சோபர்ஸ், கிங்ஸ்டன் 1958

335* - டேவிட் வார்னர், அடிலைட் இன்று

334* - மார்க் டெய்லர் பெஷாவர் 1998

309 - விரேந்தர் ஷேவாக், முல்டன் 2004

ஆஸ்திரேலிய வீரர்களின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்

380 - மேத்யூ ஹெய்டன் vs ZIM, பெர்த் 2003

335* - டேவிட் வார்னர் vs PAK, அடிலைட் இன்று

334* - மார்க் டெய்லர் vs PAK, பெஷாவர் 1998

334 - டான் பிராட்மேன் vs ENG, லீட்ஸ் 1930

329* - மைக்கேல் கிளார்க் vs IND, சிட்னி 2012

எது எப்படியோ, பிரைன் லாராவின் மைன்ட் வாய்ஸ் நவ்,

'டிம் பெய்ன்... என் கண்ணே....'

David Warner Tim Paine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment