Advertisment

ENG vs NZ: 3 கேட்ச்களை வாரிப் பிடித்த பேர்ஸ்டோ… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

England vs New Zealand 1st Test, Day 1 Highlights: Jonny Bairstow takes 3 catches, video goes viral Tamil News: நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் லாதம் மற்றும் வில் யங் சுழற்றி அடிக்க முயன்றன பந்துகளை கேட்ச் பிடித்த அவர், டெவோன் கான்வே விரட்ட முயன்ற பந்தையும் தரையுடன் சேர்த்து வாரிப் பிடித்தார்.

author-image
WebDesk
New Update
Watch viral video: Bairstow catches 3 slip in ongoing eng vs nz test

Jonny Bairstow’s brilliant catches in ongoing eng vs nz test

ENG VS NZ, 1st test Tamil News: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன்படி இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட போட்டி என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.

Advertisment

இங்கிலாந்து அணியின் தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகினார். புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்றுள்ளார். இதேபோல் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஒதுங்கியதால் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். பென் ஸ்டோக்ஸ்-மெக்கல்லம் கூட்டணியில் இங்கிலாந்து அணி புதிய அத்தியாயத்தை வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்காத நிலையில், விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. இறுதியில், நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கொலின் டி கிராண்ட்ஹோம் 42 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், மெட்டி பாட்ஸ் தலா 4 விக்கெட்டுகளையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும், பின்னர் வந்த வீரர்களில் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக சாக் கிராலி 43 ரன்கள் எடுத்தார். அந்த அணி தற்போது நியூசிலாந்தை விட 16 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. பென் ஃபோக்ஸ் 6 ரன்னுடனும், ஸ்டூவர்ட் பிராட் ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

3 கேட்ச்களை வாரிப் பிடித்த பேர்ஸ்டோ…

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு பந்துவீச்சில் தொடக்கம் முதலே நெருக்கடி கொடுத்தது இங்கிலாந்து. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மெட்டி பாட்ஸ் வேகத் தாக்குதல் தொடுத்தனர். பேட்ஸ்மேன்களுக்கு மிரட்ச்சியை ஏற்படுத்திய பந்துகள் அங்கு பீல்டிங்கில் வீரர்கள் வசம் சிக்கின. அப்படி சிக்கிய கேட்ச்களை இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் லாவகமாக பிடித்தார்.

நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் லாதம் மற்றும் வில் யங் சுழற்றி அடிக்க முயன்றன பந்துகளை கேட்ச் பிடித்த அவர், டெவோன் கான்வே விரட்ட முயன்ற பந்தையும் தரையுடன் சேர்த்து வாரிப் பிடித்தார். மொத்தமாக பேர்ஸ்டோ 3 கேட்ச்களை பிடித்து அசத்தினார். அவர் கேட்ச் பிடிக்கும் வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Sports Cricket New Zealand Viral Video England Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment