Advertisment

நண்பனுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து… இணையத்தை கலக்கும் தோனியின் வீடியோ!

CSK captain MS Dhoni in close friend's birthday party after IPL 2022, video goes viral in social media Tamil News: சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தனது நண்பரும் டென்னிஸ் பயிற்சியாளருமான சுரேந்தர் குமாரின் பிறந்தநாள் விழாவில் நேரில் விசிட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

author-image
WebDesk
New Update
Watch viral video: Dhoni shows up at close friend's birthday party

 legendary captain MS Dhoni showed up at his tennis coach Surender Kumar's birthday party TAMIL NEWS

MS Dhoni Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்ற 15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜாதான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்தாண்டு நடந்த மெகா ஏலத்திற்கு பிறகு அணியை மறுகட்டமைத்த நடப்பு சாம்பியானான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தொடர் தோல்விகளால் துவண்டது. மேலும், லீக்கில் நடந்த 14 ஆட்டங்களில் 4ல் மட்டும் வெற்றி பெற்று பட்டியலில் 9வது இடத்தைப்பிடித்து பெரும் பின்னடைவை சந்தித்தது.

Advertisment

ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், லீக் சுற்றின் பாதியிலே பணிச்சுமை, கவனச் சிதறல் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து சென்னை அணியை மீண்டும் எம்.எஸ் தோனி வழிநடத்தினார். அவரது தலைமையிலான அணி எதிர்பார்த்தது போல் நடப்பு தொடர் அமையவில்லை. எனினும், அடுத்த சீசனில் மிகவும் உறுதியாகவும், வலிமை பெற்றும் “கம் பேக்” கொடுப்போம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தனது டென்னிஸ் பயிற்சியாளர் சுரேந்தர் குமாரின் பிறந்தநாள் விழாவில் நேற்று பங்கேற்றார். ராஞ்சியைச் சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளர் சுரேந்தர் குமார் தோனியின் நீண்ட கால நெருங்கிய நண்பரும் ஆவார். அவரது பிறந்த நாள் விழா ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. அந்த இடத்திற்கு நேரில் விசிட் செய்த தோனி தனது நண்பரின் குடுப்பதினருடன் இணைந்து நண்பனுக்கு கேக் வெட்டி மகிழ்ந்தார்.

ஜேஎஸ்சிஏ மைதானத்தில் தோனி கேக் வெட்டி மகிழும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை சமூக வலைதளத்தில் பத்திடப்பட்டது. தற்போது, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்ட வரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Viral Social Media Viral Chennai Super Kings Sports Cricket Ipl 2022 Viral Photo Viral Video Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment