scorecardresearch

West indies vs Bangladesh Live Score: இரண்டாவது வெற்றி யாருக்கு? வெஸ்ட் இண்டீஸ் VS பங்களாதேஷ் ஸ்கோர்.

World Cup 2019,West indies vs Bangladesh Match Live Score card:இரு அணிகளும் தங்களது இரண்டாவது வெற்றியை நோக்கி மோத உள்ளனர்.

West indies vs Bangladesh Live Score: இரண்டாவது வெற்றி யாருக்கு? வெஸ்ட் இண்டீஸ் VS பங்களாதேஷ் ஸ்கோர்.
West indies vs Bangladesh

West indies vs Bangladesh World Cup 2019 Live Score: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூன்.17)
வெஸ்ட் இண்டீஸ் அணி Vs பங்களாதேஷ் அணி மோத உள்ளது.நடப்பு உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று உள்ளது.இரண்டு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது.இதன் மூலம் புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளை பெற்று உள்ளது.

பங்களாதேஷ் அணி அணியும் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று உள்ளது.இரண்டு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது.இதன் மூலம் புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளை பெற்று உள்ளது.

இரண்டு அணிகளுமே ஒரே புள்ளிகளை கொண்டு உள்ளது.இன்று இந்த இரு அணிகளும் தங்களது இரண்டாவது வெற்றியை நோக்கி மோத உள்ளனர்.இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற உள்ளது. இப்போட்டியை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் – பங்களாதேஷ் மோதும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நீங்கள் கண்டுகளிக்லாம். இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஆன்லைனில், ஹாட் ஸ்டாரில் போட்டியை காணலாம். அதேபோன்று, லைவ் ஸ்கோர் கார்டை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: West indies vs bangladesh live score world cup 2019 west indies vs bangladesh 2019 live score