Advertisment

2019 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய கேப்டன் யார்?

மூன்று பேரை கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக நாம் கருத முடிகிறது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
2019 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய கேப்டன் யார்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பது ஊர் அறிந்ததே!.

Advertisment

ஆனால், அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில், 'நடப்பு உலக சாம்பியன்' ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக யார் செயல்படப் போகிறார்? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

உலகக் கோப்பை தொடருக்குள் ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தண்டனைக் காலம் முடிந்துவிடும். ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்டனைக் காலம் முடிந்தாலும், ஸ்மித் அதற்கு அடுத்த ஓராண்டுக்கு கேப்டனாக முடியாது. ஒரு வீரராகவே அணியில் தொடர்வார். அதன்பின், அவரது ஆட்ட திறன், செயல்பாடு, மற்ற நிர்வாகிகள் ஆதரவு என பல கட்ட விஷயங்களை ஆராய்ந்த பின், அவருக்கு மீண்டும் கேப்டன் பதவி வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஆனால், வார்னர் மீண்டும் துணை கேப்டன் உள்ளிட்ட எந்த பதவிக்கும் பரிசீலனை செய்யப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், ஸ்மித் 2019 உலகக் கோப்பைக்கு கேப்டனாக முடியாது. இதனால், மூன்று பேரை கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக நாம் கருத முடிகிறது.

போட்டி நடைபெறும் இடம் இங்கிலாந்து. வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் இந்த ஆடுகளங்களில் ஆஸ்திரேலியாவால் எளிதில் சமாளிக்க முடியும். துணைக் கண்டம் போன்று திணற வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, 24 வயதே ஆன இளம் வீரர் டிராவிஸ் ஹெட்டை கேப்டனாக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யலாம். இவர் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் உள்ளவர். மைக்கேல் ஹசிக்கு பிறகு, ஆஸி., மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கும் வீரராக ஒருநாள் போட்டிகளில் வலம் வருகிறார்.

தடை காலம் முடிந்து மீண்டும் ஒருவேளை ஸ்மித் கேப்டன் ஆக்கப்பட்டால், நிச்சயம் அவரது வயது 30-ஐ தாண்டி இருக்கும். இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. ஆனால், உலகக் கோப்பை தொடருக்கு டிராவிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டால், ஸ்மித்திற்கு பிறகு அணியை வழிநடத்தக் கூடிய இளம் கேப்டனாக ஜொலிக்க நல்ல வாய்ப்புள்ளது.

இல்லை, நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என ஆஸி., நிர்வாகம் நினைத்தால், 35 வயதான ஜார்ஜ் பெய்லிக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கலாம், அல்லது தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச்சை கேப்டனாக நியமிக்கலாம்.

அதேசமயம், தற்போது தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள 33 வயதான டிம் பெய்னும் கேப்டனுக்கான ரேஸில் உள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்-ஐ கூட கேப்டனாக நியமனம் செய்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை!.

Tim Paine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment