Advertisment

West Indies vs Afghanistan Live Score: க்றிஸ் கெயிலின் கடைசி போட்டி? வெஸ்ட் இண்டீஸ் vs ஆப்கன் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

World Cup 2019, West Indies vs Afghanistan Match Live Score Updates: வெஸ்ட் இண்டீஸ் vs ஆப்கானிஸ்தான் லைவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WI vs AFG Live Score, West Indies vs Afghanistan World Cup Live Score

WI vs AFG Live Score, West Indies vs Afghanistan World Cup Live Score

Afghanistan vs West Indies Cup 2019 Live Score: உலகக் கோப்பை 2019 தொடரில், லீட்ஸ் நகரின் ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று(ஜூலை.4) நடைபெறும் போட்டியில், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், குல்பாதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

Advertisment

எட்டு போட்டிகளில் விளையாடி, ஒரேயொரு ஆட்டத்தில் மட்டும் வெற்றிப் பெற்ற வெஸ்ட் இண்டீஸ், புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்க, எட்டு போட்டிகளில் ஆடி, அனைத்திலும் தோற்றிருக்கும் ஆப்கன் அணி, கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளும், ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இன்றைய போட்டியின் முடிவுகளால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை.

எனினும், உலகக் கோப்பைத் தொடரோடு, க்றிஸ் கெயில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரின் கடைசி சர்வதேச போட்டியாக இது அமையலாம். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக காணலாம். ஆன்லைனில் ஹாட்ஸ்டாரில் போட்டியை பார்க்க முடியும்.

தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் வழங்கும் பிரத்யேக லைவ் ஸ்கோர் கார்டு மூலம், ஸ்கோர் விவரங்களை உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment