Advertisment

மனைவிகளின் ஈகோ களமாக மாறிவரும் ஐபிஎல்!

வழக்கத்துக்கு மாறாக, இம்முறை சாக்ஷியிடம் அதிகம் ஆக்ரோஷம் காண முடிகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மனைவிகளின் ஈகோ களமாக மாறிவரும் ஐபிஎல்!

ஆசை தம்பி

Advertisment

2008ம் ஆண்டு ஐபிஎல் முதன் முதலாக ஆரம்பித்த போது, இப்போது ஆடும் பல இளம் இந்திய வீரர்கள் மூணாப்பு இல்ல நாலாப்பு தான் படித்து இருப்பார்கள். அதேபோல், ரசிகர்களின் தல, தளபதி, குட்டித் தல, ஹிட்மேன் என அழைக்கப்படும் இப்போதுள்ள பல ஹூரோக்களுக்கு அப்போது வயது 20 - 26க்குள் தான் இருந்தது. சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஷ்மண் என அப்போதே சீனியர் வீரர்களாக இருந்தவர்களுக்கு மட்டுமே திருமணம் ஆகியிருந்தது. ஆனாலும், பெரும்பாலும் அவர்களின் மனைவிகள் ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்க்க அதிகம் வருவதில்லை. அதிலும், 'தாதா' கங்குலியின் மனைவி டோனா கங்குலி நேரில் பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கையை விரல் விட்டே எண்ணி விடலாமாம். அதேசமயம், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் மனைவி அஞ்சலி, தனது கணவரின் ஆட்டத்தை நேரில் பார்க்க அடிக்கடி வருவதுண்டு. மனரீதியாக சச்சின் சற்று துவண்டு இருந்தால், அஞ்சலி மேட்ச் பார்க்க நேரில் வருவார் என்று சொல்வதுண்டு. ஆனால், அவர் கிரவுண்டுக்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. கேமராக்கள் எப்போதும் அவரை நோட்டமிட்டுக் கொண்டே இருக்காது. அதுவும் மும்பையில் மேட்ச் நடந்தால் தான், அஞ்சலி மேட்ச் பார்க்க வருவார். இது ஒரு சீசன்.

அதன்பின், சாக்ஷியை 'தல' தோனி காதல் திருமணம் புரிந்த பின், அடிக்கடி கணவரின் ஆட்டத்தை நேரில் வந்து ரசிப்பது சாக்ஷியின் வழக்கம். ஜிவா, பிறப்பதற்கு முன்பும் சரி... பிறந்த பின்பும் சரி... மேக்சிமம் காதல் கணவரின் அதிரடி ஆட்டத்தை நேரில் காண ஓடி வந்துவிடுவார். பார்வையாளராக மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல், 'கமான் மேன்' , 'கமான் தோனி' , 'வீ வான்ட் சிக்ஸர்' என்று ரசிகர்களின் குரலோடு இணைந்து அவரும் தோனியை மோட்டிவேட் செய்வார். அப்போது, முரளி விஜய்யின் மனைவி, லக்ஷ்மிபதி பாலாஜியின் மனைவி, ரெய்னாவின் மனைவி என ஒரு சின்ன கேங் உருவானது. ஆனால், சாஃப்ட்டான கேங்காக தான் அது இருக்கும். அவ்வப்போது, அவர்களை கேமரா நோக்கும் போது, நம்ம சிஎஸ்கே ரசிகர்கள், 'அங்கப்பாருடா தல ஒய்ஃப்' என்று சிலாகிப்பதோடு சரி... இது ஒரு காலம்.

ஆனால், இப்போ என்னன்னா வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக ஆடி வருகிறார்களோ இல்லையோ, அவர்கள் மனைவிகளின் ஆக்ரோஷமும், வேகமும் ஆஃப் தி கிரவுண்டில் பயங்கரமாக உள்ளன. இதில் முதன்மை இடத்தில் இருப்பவர், 'தளபதி' விராட் கோலியின் காதல் மனைவி அனுஷ்கா ஷர்மா. இந்த சீசனில் ஆர்சிபி இதுவரை விளையாடியுள்ள அத்தனை போட்டிகளையும் நேரில் பார்த்துள்ளார். என்னமா எக்ஸ்பிரஷன் கொடுக்குறாங்க அவங்க!. விராட் கோலி சிக்ஸர் அடித்தால் ஒன்று, ஃபோர் அடித்தால் ஒன்று, சிங்கிள்ஸ் எடுத்தால் ஒன்று, அவுட்டானால் ஒன்று, கேட்ச் பிடித்தால் ஒன்று என வேரியேஷன்களை கலந்து கட்டி அடிக்கிறார்.

பொதுவாக, அரைசதம் அல்லது சதம் அடித்தால் பேட் மூலம் பிளையிங் கிஸ் கொடுப்பது கோலியின் ஸ்டைல். அனுஷ்காவுக்கு!. ஆனால், இம்முறை ஒவ்வொரு மேட்சிலும் வெற்றி தான் மிஸ் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த ரசிகர்கள், 'ப்ளீஸ் அனுஷ்கா! நீங்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். விராட் ஜெயிக்கட்டும்' என மீம்ஸ் போடும் அளவிற்கு சென்றுவிட்டார் அனுஷ்கா. (நாங்க சரியா விளையாடாததற்கு அனுஷ்கா எப்படி பொறுப்பாக முடியும்-னு 2015 உலகக் கோப்பையின் போது கோலி கேட்ட கேள்வி தான் நமக்கும்).

அடுத்ததாக, அனுஷ்காவுக்கு சற்றும் சளைக்காத ரித்திகா. அதான் 'ஹிட்மேன்' ரோஹித் ஷர்மா மனைவி. இவரிடம் எக்ஸ்பிரஷன்கள் இருக்காது. ஆனால், மும்பை விளையாடும் அனைத்துப் போட்டிகளுக்கும் தவறாமல் ஆஜர் ஆகிடுவார். கோலியை போல, பிளையிங் கிஸ் அனுப்புவதில் ரோஹித்தும் வல்லவர் தான். ஆனால், பாவம் ரோஹித்தும் இப்போது கிஸ் கொடுக்க முடியாத நிலையில் தான் இருக்கிறார். இதுவரை இரண்டே மேட்சில் மட்டுமே மும்பை வென்றுள்ளது.

பொதுவாக, ரோஹித் மனைவி மேட்ச் பார்க்க வந்தால், ரோஹித் பிரிச்சு மேஞ்சுடுவார் என்று சொல்வார்கள். அதை நம்பி ரித்திகா எல்லா மேட்சுக்கும் வர, ஏனோ மும்பை மெகா திணறல் போடுகிறது. குறிப்பாக, ரோஹித் சரியாக அடிக்கவில்லை என்றால், ரித்திகா முகம் வாடும் பாருங்க.. நமக்கே பரிதாபமாக தான் இருக்கும்.

அடுத்து ஷிகர் தவான் மனைவி ஆயிஷா. கடந்த காலங்களில் அதிகம் கிரவுண்டில் தலைக் காட்டாதவர், இப்போது ஹைதராபாத் விளையாடும் அனைத்து மேட்சிலும் ஆஜர். தவான் அடிக்கிறாரோ இல்லையோ, இவர் யாரையோ அடிப்பது போன்றே உட்கார்ந்து இருப்பார்.

தோனியின் மனைவி சாக்ஷி, ரெய்னா மனைவி பிரியங்கா, வாட்சன் மனைவி லீ என இங்கு யெல்லோ ஜெர்சியில் ஒரு கேங் அமர்ந்திருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக, இம்முறை சாக்ஷியிடம் அதிகம் ஆக்ரோஷம் காண முடிகிறது. தோனி அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸரிலும், ஒரு பரம திருப்தியை, வைராக்கியத்தை தீர்த்துக் கொண்ட பெண்ணாக அப்போது அவரை காண முடிகிறது.

publive-image

இதற்கு ஒரு காரணம் இருக்கிறது!. கடந்த ஆண்டு புனே சூப்பர் ஜெயண்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்கியது புனே நிர்வாகம். அப்போது கூட சாக்ஷி பெரிதாக வருத்தப்படவில்லை. ஆனால், புனே உரிமையாளரின் சகோதரர் ஸ்மித்தை புகழ்ந்தும், தோனியை தாழ்த்தியும் விமர்சித்து இருந்ததை தான் சாக்ஷியால் ஜீரணிக்கவே முடியவில்லை. அப்போதே, அதற்கு ஒரு குட்டி உதாரணம் சொல்லி பதில் அளித்த சாக்ஷி, மீண்டும் தன் கணவர் சென்னை அணிக்காக ஆடவிருந்த நாட்களை நோக்கி வாஞ்சையுடன் காத்திருந்தார் என்றே கூற வேண்டும்.

அதன் வெளிப்பாடு தான், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் போதும், தோனியின் சூறாவளி ஆட்டத்தின் போதும் சாக்ஷியின் முகத்தில் அளப்பறியா திருப்தியை காண முடிகிறது. அதுமட்டுமின்றி, தோனி ஒரு சிக்ஸ் அடித்தால், 'அடுத்து ஒரு சிக்ஸ் வேண்டும்' என்று கூச்சலிட்டு தன் கணவனை வெறியேற்றிக் கொண்டிருக்கிறார்.

முன்பெல்லாம், கணவரின் ஆட்டத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொண்ட மனைவிமார்கள், இப்போது அதை தங்களின் பெர்ஸ்னலாகவே எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். சென்னைக்கும் பெங்களூருவுக்கும் மேட்ச் நடக்கிறது என்றால், கேமராக்கள் தவறாமல் சாக்ஷி முகத்தையும், அனுஷ்கா முகத்தையும் காட்டிக் கொண்டே இருக்கின்றன. இதனால், அங்கு அவர்களிடையே ஈகோவும் ஏற்பட்டுவிடுகிறது. இதை தவிர்க்க முடிவதில்லை. தோனியா? கோலியா? என்கிற டாக் போய் உன் புருஷனா? என் புருஷனா? என்கிற நிலை இப்போது வந்துவிட்டது. இந்திய கிரிக்கெட்டில் காணப்படும் ஹீரோக்கள் கலாச்சாரமே இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

வீரர்களிடையே இருந்த ஈகோ, ரசிகர்களுக்கு பரவி, இப்போது அங்கிருந்து மனைவிகளையும் அது தொற்றிக் கொண்டுள்ளது. முந்தைய காலங்களில் வீரர்களின் மனைவிகள் இடையே இருந்த ஈகோ கிளாஷ், இப்போது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை!.

Ipl 2018 Virat Kohli Anushka Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment